‘ஜல்லிக்கட்டு போட்டி’ : முதல் மரியாதை வழங்கக் கூடாது!

 

‘ஜல்லிக்கட்டு போட்டி’ : முதல் மரியாதை வழங்கக் கூடாது!

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் போது காளைகளுக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கோ முதல் மரியாதை வழங்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த ஒருவர் நீதிமன்றத்தில் அளித்த மனுவில், ‘ஜல்லிக்கட்டு விழா கமிட்டித் தலைவராக இருப்பவர், முறையாக பணியை செய்வதில்லை. தன்னிச்சையாக செயல்படுகிறார். ஆதித் திராவிட சமூகத்தினருக்கு வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். விழாக்குழுவை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

‘ஜல்லிக்கட்டு போட்டி’ : முதல் மரியாதை வழங்கக் கூடாது!

அப்போது, ஜல்லிக்கட்டு நெருக்கத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பதால் நிவாரணத்தை வழங்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதனைக் கேட்டுக் கொண்ட மனுதாரர், கடந்த ஆண்டு மாடுபிடி வீரர்களுக்கும் மாடுகளுக்கும் ப்ளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு முதல் மரியாதை அளிக்கப்பட்டதை ரத்து செய்து உத்தரவிடுமாறும் ஜல்லிக்கட்டு வழக்குகளை பராமரிக்க தனி வங்கிக் கணக்கு தொடங்குமாறும் கோரினார். இது கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளுடன் பொருந்தும் என்று கூறி அந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

‘ஜல்லிக்கட்டு போட்டி’ : முதல் மரியாதை வழங்கக் கூடாது!

கடந்த ஆண்டு, ஜல்லிக்கட்டின் போது முதல் மரியாதை வழங்கப்பட கூடாது என்றும் நிகழ்ச்சியின் கணக்கு முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும் பேனர்கள், கட்சி, சமூகம் தொடர்பான கொடிகள் வைக்கப்படக் கூடாது என்றும் ஜல்லிக்கட்டு முழுவதும் வீடியோ பதிவு செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென்றும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.