விறுவிறு வாக்குப்பதிவு தொடங்கியது ; மே. வங்கம்; அசாமில் பலத்த பாதுகாப்பு!!

 

விறுவிறு வாக்குப்பதிவு தொடங்கியது  ; மே. வங்கம்; அசாமில் பலத்த பாதுகாப்பு!!

மேற்கு வங்கத்தில் 5 மாவட்டங்களில் உள்ள  30 தொகுதிகளில் 191 வேட்பாளர்கள், அசாமில் 47 தொகுதிகளில் 204 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன. அத்துடன் இங்கு 294 தொகுதிகளுக்கு 8 கட்டமாகவும், அசாமில் 126 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

விறுவிறு வாக்குப்பதிவு தொடங்கியது  ; மே. வங்கம்; அசாமில் பலத்த பாதுகாப்பு!!

மேற்குவங்க மாநிலத்தின் முதல்கட்டத் தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக 37% வாக்குப்பதிவு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டு மொத்தம் 10 ஆயிரத்து 288 வாக்குப்பதிவு மையங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையங்களிலும் ஆயிரம் பேர் மட்டுமே வாக்களிக்க அனுமதி அளிக்கப்படவுள்ளது. அசாம் மாநிலத்தில் 264 வேட்பாளர்கள் போட்டி களத்தில் உள்ள நிலையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. அங்கு மொத்தம் 11,537 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு81 லட்சத்து 9 ஆயிரத்து 815 பேர் வாக்களிக்கவுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விறுவிறு வாக்குப்பதிவு தொடங்கியது  ; மே. வங்கம்; அசாமில் பலத்த பாதுகாப்பு!!

கொரோனா பரவலை தடுக்க வாக்காளர்கள் மாஸ்க் அணிந்தும், கையுறை அணிந்தபடியும் வாக்களித்து வருகின்றனர். கொரோனா பாதித்தவர்களும் வாக்களிக்க ஏதுவாக கடைசி நேரத்தில் ஒரு மணி நேரம் கூடுதல் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. சட்டபேரவைத் தேர்தலை ஒட்டி தேர்தல் நடக்கும் வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.