முதல்வரே..பழிவாங்கிய பிறகுதான் இந்து வெறுப்பு உங்களை விட்டுச்செல்லுமா?காயத்ரி ரகுராம்

முதல்வரே..பழிவாங்கிய பிறகுதான் இந்து வெறுப்பு உங்களை விட்டுச்செல்லுமா?காயத்ரி ரகுராம்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தினை சென்னையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அர்ச்சகர் பயிற்சி முடித்த 29 ஓதுவார்கள் உள்பட 50 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர். இந்த 58 பேரும் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட 50 கோவில்களில் பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

முதல்வரே..பழிவாங்கிய பிறகுதான் இந்து வெறுப்பு உங்களை விட்டுச்செல்லுமா?காயத்ரி ரகுராம்

கடந்த 1970 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கருணாநிதி தமிழக சட்டப்பேரவையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை கொண்டு வந்தார் ஆனாலும் பல்வேறு சட்ட வழக்குகள் காரணமாக இந்த சட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்தது. பெரியாரின் பெருங்கனவு இந்த சட்டம். அவர் உயிரோடு இருக்கும் வரைக்கும் இந்த சட்டம் நிறைவேற்றப்படாமல் போனதால் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் என்று கருணாநிதி குறிப்பிட்டு வந்தார் .

50 ஆண்டுகள் கழித்து பெரியாரின் கனவை, கலைஞரின் சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறார் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் என்று அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

முதல்வரே..பழிவாங்கிய பிறகுதான் இந்து வெறுப்பு உங்களை விட்டுச்செல்லுமா?காயத்ரி ரகுராம்

இந்நிலையில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றால் (கலாச்சாரம், அரசியலமைப்பை, நமது வரலாறு, பாரம்பரியம் நீங்கள் மாற்ற விரும்பும் போது) அனைத்துச் சாதியினருக்கும் சமமான இட ஒதுக்கீடு கொடுங்கள். இது தான் உண்மையான சமூக நீதி அல்லவா? என்று தமிழக பாஜக கலை மற்றும் கலாசசரா பிரிவின் செயலாளர் காயத்ரி ரகுராம்.

முதல்வரே..பழிவாங்கிய பிறகுதான் இந்து வெறுப்பு உங்களை விட்டுச்செல்லுமா?காயத்ரி ரகுராம்

அவர் மேலும், அனைத்து சாதியையும் ஒழியுங்கள், முதல்வரே.. திராவிடக் கழகம் இன்னும் ஒழிக்கப்படவில்லை. ஆனால் மற்ற மதத்தை அரசுக்குக் கொண்டுவருகிறது .புத்தர் என்று அழைக்கிறார்கள், ஆனால் அவர்கள் கிறிஸ்தவத்திற்கு மாறுகிறார்கள். இப்படித்தான் நீங்கள் வெவ்வேறு மதத்திற்கு மாறி சாதியை ஒழிக்கிறீர்களா?மத்திய அரசு EWS அறிவித்த பிறகும் நீங்கள் அதை இங்கே தமிழ்நாட்டில் அறிவிக்க விரும்பவில்லை. அனைத்து 79 FC சாதியினரையும் பழிவாங்கிய பிறகு இந்து வெறுப்பு உங்களை விட்டுச்செல்லுமா? என்று கேட்கிறார்.