• April
    05
    Sunday

Main Area

Main



விக்ரம் நடிக்கும் "கோப்ரா" படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Cobra
Cobra

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது  58-வது படத்தில் நடிக்கிறார்.  கோப்ரா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.  இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில்  உருவாகவுள்ள இப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் ,  ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.  இந்த படத்தில் விக்ரம் பல தோற்றங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

 

 

இந்நிலையில் விக்ரம் நடிக்கும் "கோப்ரா" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 28-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.