முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு வரும் 20 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்!

 

முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு வரும் 20 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்!

மருத்துவ படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் 20-ஆம் தேதி முதல் கல்லூரிகளுக்கு வரவேண்டும் என மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு, இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் ஜனவரி 31 ஆம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பள்ளிகள் (10, மற்றும் 12-ஆம் வகுப்புகள் மட்டும்) நாளை முதல் தொடங்கப்படவுள்ளன. அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் 16.11.2020 முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்க வழங்கப்பட்டது.

முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு வரும் 20 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்!

இந்நிலையில் அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கு, மருத்துவ கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான வகுப்புகள், வருகிற 20ம் தேதி முதல் துவக்கப்பட உள்ளது. அனைத்து மாணவர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும். ஆள்மாறாட்டத்தை தவிர்க்கும் வகையில் நீட் தேர்வு போன்ற சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும். பிப்ரவரி 2 ஆம் தேதியில் இருந்து வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்’’ எனக் குறிப்பிட்டுள்ளது.