வட்டார வளர்ச்சி அலுவலர் கொரோனாவால் உயிரிழப்பு!

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாற்று சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகிக் கொண்டே செல்லும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திலும் பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பூந்தமல்லி, திருவேற்காடு, மீஞ்சூர், பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் 209 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் திருவள்ளூர், பூந்தமல்லி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சென்னை அண்ணாநகரை சேர்ந்த 50 வயதான சாமிநாதன் என்பவர் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 21 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாற்று சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். அரசு ஊழியர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular

பாஜகவில் இணையும் கு.க.செல்வம் : திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு. க. செல்வம். திமுக தலைமை நிலைய செயலாளராகவும் பதவி வகித்து வரும் இவர் திமுக தலைமையிடத்துக்கு நெருக்கமானவர். இதனிடையே சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ...

நெல் ஈரமாக இருந்தாலும் கொள்முதல் செய்யப்படும் : அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்னர், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் படி, சென்னை மட்டுமில்லாமல் திருவாரூர், கோவை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது....

`நள்ளிரவில் வேட்டை; சுட்டுக்கொல்லப்பட்ட வாலிபர்!’- ஊத்தரங்கரையில் நடந்த பயங்கரம்

நள்ளிரவில் மான் வேட்டைக்கு சென்ற வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஊத்தரங்கரையில் நடந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ளது இளவம்பாடி காப்புக்காடு பகுதியில் அதிகமாக மான்,...

“திருட போன இடத்தில செல்போனை விட்டு சென்ற புது திருடர்கள்” -நகைக்கடை கொள்ளையில் அன்று இரவே சிக்கினார்கள் .

தொழிலுக்கு புதுசா வந்த திருடர்கள் ஒரு நகைக்கடைக்குள் புகுந்து நகை ,பணத்தை திருடி செல்லும்போது அவர்களின் செல்போனை விட்டு சென்றதால், உடனே போலீசின் கையில் அவர்கள் சிக்கினார்கள் . டெல்லியின் உத்தம் நகர் பகுதியிலிருக்கும்...