சென்னை அணிக்கு முதல் தோல்வி – பெங்களூர் வெற்றி – ISL திருவிழா

 

சென்னை அணிக்கு முதல் தோல்வி – பெங்களூர் வெற்றி – ISL திருவிழா

ISL கால்பந்து திருவிழாவில் ரசிகர்களுக்கு விருந்தாக தினமும் ஒரு போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு 7.30 மணிக்கு கோவாவின் ஜி.எம்.சி மைதானத்தில் சென்னை Vs பெங்களூர் அணிகளுக்குமான போட்டி நடந்தது.

பெங்களூர் அணி இரண்டு போட்டிகளில் ஆடி, இரண்டிலும் டிராவாகி இருந்தது. சென்னை அணியோ இரண்டு போட்டிகளில் ஒன்றில் வென்று ஒன்றில் தோற்றிருந்தது. எனவே, இரு அணிகளும் பாயிண்ட் டேபிளில் உயர இந்த வெற்றி அவசியம் எனப் போராடியது.

சென்னை அணிக்கு முதல் தோல்வி – பெங்களூர் வெற்றி – ISL திருவிழா

போட்டித் தொடங்கி 50 நிமிடங்கள் வரை இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்க வில்லை. இதனால், போட்டி யாருமே கோல் போடாது டிராவில் முடியுமோ என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆட்டத்தில் 56 வது நிமிடத்தில் பெங்களூர் அணியின் சுனில் கோல் ஒன்றை அடித்தார்.

சென்னை அணிக்கு முதல் தோல்வி – பெங்களூர் வெற்றி – ISL திருவிழா

சுனில் அடித்த கோலால் இறுதி நிமிடத்தில் பெங்களூர் அணி வெற்றியை ருசித்தது. இப்போதைய பாயிண்ட் டேபிள் நிலவரப்படி, பெங்களூர் மூன்றில் ஒன்றில் வெற்றி, இரண்டில் டிரா எனும் நிலையில் 3 இடத்தைப் பிடித்துள்ளது.

சென்னை அணி மூன்றில் ஒன்றில் வெற்றி, ஒன்றில் டிரா, ஒன்றில் தோல்வி என ஆறாம் இடத்தில் இருக்கிறது.