நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு!

 

நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதனிடையே நேற்று முதல் தமிழகம் முழுவதும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு மாவட்டத்திலிருந்து மற்ற மாவட்டத்துக்கு மக்கள் செல்லாத வண்ணம் இ-பாஸ் நடைமுறை அமலிலிருந்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தான் கொரோனா அதிகமாகப் பரவி இருந்த நிலையில், தற்போது பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. கொரோனாவில் இருந்து தம்மை காத்துக் கொள்ளச் சென்னைவாசிகள் மற்ற மாவட்டங்களை நோக்கி படையெடுத்ததே இதற்கு முக்கிய காரணம்.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு!

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 67 வயதான முதியவர், கோவை ஈ.எஸ்.இ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.