செங்கல்பட்டில் கருப்பு பூஞ்சை நோய்க்கு முதல் பலி!

 

செங்கல்பட்டில் கருப்பு பூஞ்சை நோய்க்கு முதல் பலி!

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள், ஸ்டீராய்டு எடுத்துக்கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளையே இந்த நோய் அதிகம் பாதிப்பதாக கூறப்படுகிறது. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தக்கூடிய நோய் தான் என்கிறார்கள் நிபுணர்கள்.

செங்கல்பட்டில் கருப்பு பூஞ்சை நோய்க்கு முதல் பலி!

எனினும், கருப்பு பூஞ்சை நோய் தீவிரமடைந்து விட்டால் உயிரையே பறிக்கும் அளவுக்கு அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கிறார்கள். இதனால், நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை நோய்க்காகவே சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே கண்ணம்பட்டு பகுதியைச் சேர்ந்த பாரதி(53) என்ற நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இதுவே முதல் உயிரிழப்பு.