நிம்மதி, ஏமாற்றம், அதிருப்தி…. உள்நாட்டு விமான போக்குவரத்தின் முதல் நாள் நிலவரம்…

 

நிம்மதி, ஏமாற்றம், அதிருப்தி…. உள்நாட்டு விமான போக்குவரத்தின் முதல் நாள் நிலவரம்…

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு தழுவிய லாக்டவுனை நடைமுறைப்படுத்தியது. அது முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. இதனால் கடந்த 2 மாதங்களாக வானில் பறக்கவில்லை. இந்நிலையில் நேற்று முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது.

நிம்மதி, ஏமாற்றம், அதிருப்தி…. உள்நாட்டு விமான போக்குவரத்தின் முதல் நாள் நிலவரம்…

கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதை குறிப்பிட்டு, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தங்களது விமான நிலையங்களில் உள்நாட்டு விமான சேவைகளை அனுமதிக்க தயக்கம் காட்டின. மேற்கு வங்க அரசு உள்நாட்டு விமான சேவையை அனுமதிக்க மறுத்து விட்டது. இதன் காரணமாக சுமார் 630 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்ய்பபட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

நிம்மதி, ஏமாற்றம், அதிருப்தி…. உள்நாட்டு விமான போக்குவரத்தின் முதல் நாள் நிலவரம்…

பல விமான நிலையங்களில் பயணிகளுக்கு கடைசி நேரத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டதால் கடும் அதிருப்தி மற்றும் குழப்பம் அடைந்தனர். மும்பை விமான நிலையத்தில் கடை நிமிடத்தில் விமான ரத்து செய்ய்பபட்ட தகவல் தெரிவிக்கப்பட்டதால் கோபம் அடைந்த பயணிகள் பணியாளர்களை வேதனைப்படுத்தியதால் சமூக விலகல் மறக்கப்பட்டது. அதேசமயம் பல விமான நிலையங்களில் சில பயணிகள் தங்களால் சொந்த மாநிலத்துக்கு செல்ல முடிகிறதே என நிம்மதி அடைந்தனர். தமிழ்நாடு, கர்நாடகா, பீகார், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் தங்களது விமான நிலையத்துக்கு வரும் பயணிகளுக்காக வெவ்வேறு சொந்த தனிமைப்படுத்துதல் மற்றும் நிபந்தனைகளை அறிவித்தன. இது உள்நாட்டு விமானபோக்குவரத்து சேவை மீண்டும் தொடங்குவதில் விமான நிறுவனங்களுக்கு அதிருப்தி அளித்தது.