ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா… தொடர் நடைபெறுமா?

 

ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா… தொடர் நடைபெறுமா?

சர்வதேச தொடரில் மிகவும் பிரமாண்டமான மதிப்புமிக்க தொடராக ஒலிம்பிக் பார்க்கப்படுகிறது. எந்தவொரு நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே அவர்களின் இலக்காக இருக்கும். அந்தளவிற்கு சர்வதேச அளவில் பிரபலமான தொடர். இந்தத் தொடர் இம்மாதம் ஜூலை 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதியோடு முடிவடைகிறது. இதில் தடகளம், வாள்வீச்சு, குத்துச்சண்டை உள்ளிட்ட போட்டிகள் அடங்கும்.

ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா… தொடர் நடைபெறுமா?
ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா… தொடர் நடைபெறுமா?

இந்த தொடர் கடந்த ஆண்டே நடைபெற வேண்டியது. ஆனால் கொரோனா பெருந்தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது பெரும்பாலான நாடுகளில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஒலிம்பிக் தொடரை நடத்த ஒலிம்பிக் நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி பல்வேறு கட்ட கட்டுப்பாடுகளுடன் ஒலிம்பிக் நடைபெறவிருக்கிறது. இச்சூழலில் ஒலிம்பிக் தொடர் நடைபெறும் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் கொரோனா தொற்று தலைதூக்கியிருப்பது வீரர்களிடையே கலக்கத்தை உண்டாக்கியுள்ளது. தொடர் ஒருங்கிணைப்பாளர் மாஸா டகாயா இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார். அந்த நபர் யார் என்று சொல்ல விரும்பாத அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேபோல தலைமை ஒருங்கிணைப்பாளர் சீகோ ஹாஷிமோடோ கூறுகையில், “கொரோனா தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ள செயல்திட்டம் எங்களிடம் இருப்பதை உறுதிசெய்வோம்” என்றார்.