மாநிலங்களுக்கு பறந்த ’கோவிஷீல்ட்’ – ஜன.16 முதல் செயல்பாட்டுக்கு வரும்!

 

மாநிலங்களுக்கு பறந்த ’கோவிஷீல்ட்’ – ஜன.16 முதல் செயல்பாட்டுக்கு வரும்!

இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஜனவரி 16ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனமும் இணைந்து கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்ட் தடுப்பூசியை உருவாக்கியுள்ளன.

இதனை இந்தியாவில் தயாரிக்க சீரம் நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. கோவிஷீல்ட்டுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) அனுமதியளித்தைத் தொடர்ந்து, மத்திய அரசு அவசரக்கால பயன்பாட்டிற்காக தடுப்பூசியைச் செயல்படுத்த ஒப்புதல் வழங்கியது.

மாநிலங்களுக்கு பறந்த ’கோவிஷீல்ட்’ – ஜன.16 முதல் செயல்பாட்டுக்கு வரும்!
கோவிஷீல்ட்

முதற்கட்டமாக கொரோனா தடுப்பு முன்கள வீரர்களான சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 3 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதற்கான செலவை மத்திய அரசே ஏற்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக 50 வயதைக் கடந்தோர், 50 வயதைக் கடந்து வேறு நோய்களைக் கொண்டவர்கள் உள்ளிட்ட 27 கோடி பேருக்கும், மூன்றாம் கட்டமாக 30 கோடி மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதற்கு முதற்கட்டமாக 1 கோடியே 10 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு சீரம் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்திருக்கிறது.

மாநிலங்களுக்கு பறந்த ’கோவிஷீல்ட்’ – ஜன.16 முதல் செயல்பாட்டுக்கு வரும்!

தற்போது 5 கோடி தடுப்பூசிகள் தயார் நிலையில் இருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. 150க்கும் மேற்பட்ட உலக நாடுகள் கோவிஷீல்ட்டுக்கு ஆர்டர் கொடுத்துள்ளன. சீரம் நிறுவனம் இந்தியாவுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளது.

மத்திய அரசுக்கு ஒரு தடுப்பூசியின் விலை 200 ரூபாய் விலை நிர்ணயம் செய்திருப்பதாக சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதர் பூனவல்லா கூறியுள்ளார். தனியாருக்கான விலை 1,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தவிர, ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசிக்கும் அரசு ஒப்புதலளித்துள்ளது. அதன் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவடைவதற்கு முன்னரே அவசரக்கால பயன்பாட்டிற்காக ஒப்புதல் வழங்கியது சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து அதிகப்படியாக கோவிஷீல்ட் தடுப்பூசியே பயன்படுத்தப்படும்; கோவாக்சின் ஒரு பேக்அப் மட்டுமே என்று ஐசிஎம்ஆர் விளக்கமளித்திருந்தது.

மாநிலங்களுக்கு பறந்த ’கோவிஷீல்ட்’ – ஜன.16 முதல் செயல்பாட்டுக்கு வரும்!

முழுமை பெறாத கோவாக்சினைப் பயன்படுத்த சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் ஆர்வம் காட்டவில்லை. கோவிஷீல்ட் தடுப்பூசிக்கே அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 16ஆம் தேதி தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதையடுத்து, முதற்கட்டமாக இன்று ஒவ்வொரு மாநிலங்களுக்கும் கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

புனேவிலிருந்து டெல்லி, பிகார், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு பைஸ்ஜெட், கோ ஏர், ஏர் இந்தியா விமானங்கள் மூலம் 40 லட்சம் தடுப்பூசிகள் கொண்டுசெல்லப்பட்டுள்ளன. டெல்லிக்கு 2 லட்சத்து 64 ஆயிரம், அசாமுக்கு 2 லட்சத்து 76 ஆயிரம், மேற்கு வங்கத்திற்கு 9 லட்சத்து 96 ஆயிரம், தமிழ்நாட்டிற்கு 5 லட்சத்து 56 ஆயிரம் என 40 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசிகளைப் பத்திரமாக இறக்கி அவற்றைப் பாதுகாப்பான இடங்களில் வைத்துள்ளனர். நாடு முழுவதும் வருகின்ற 16ஆம் தேதி தடுப்பூசி பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும். இன்று இதுதொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பிரதமர் மோடி, அரசியல் கட்சித் தலைவர்கள் முந்திக்கொண்டு தடுப்பூசி போடக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.

மாநிலங்களுக்கு பறந்த ’கோவிஷீல்ட்’ – ஜன.16 முதல் செயல்பாட்டுக்கு வரும்!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், “இன்று காலை சென்னை விமான நிலையத்து 5 லட்சத்து 56 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தடைந்தன. அதில், 5 லட்சத்து 36 ஆயிரம் கோவிஷீல்ட் தடுப்பூசிகளும், 20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகளும் அடக்கம்.

தடுப்பூசி 30 நாள்கள் இடைவெளியில் இரு முறை போடப்படும். தடுப்பூசி போட்டுக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த மாட்டோம். தாமாக முன்வருபவர்களுக்கே போடப்படும். முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு இந்தத் தடுப்பூசிகள் போடப்படும்” என்றார்.