அடுத்த வாரம் அறிமுகமாகிறது தண்ணீரில் கலந்துகுடிக்கும் கொரோனா மருந்து!

 

அடுத்த வாரம் அறிமுகமாகிறது தண்ணீரில் கலந்துகுடிக்கும் கொரோனா மருந்து!

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடிவருகிறது. கடந்த வாரம் முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டிச் சென்றது. தற்போது பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை படிபடியாகக் குறைந்து வருகிறது. ஆனால் தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால் அந்தத் தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அடுத்த வாரம் அறிமுகமாகிறது தண்ணீரில் கலந்துகுடிக்கும் கொரோனா மருந்து!

இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டுக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சினுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தவிர ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி இம்மாத இறுதியில் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வேளையில் கொரோனாவுக்கு எதிரான மருந்துகளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (DRDO) புதிய மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-டிஜி) என்ற அழைக்கப்படும் மருந்துக்கு அவசரகால பயன்பாட்டுக்காக அனுமதியும் அளித்துள்ளது.

DCGI approves anti-COVID drug developed by DRDO for emergency use - The  Hindu

டிஆர்டிஓ அமைப்பு ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் அமைப்புடன் சேர்ந்து இம்மருந்தை உருவாக்கியுள்ளது. இது தடுப்பூசி போல் அல்லாமல் பவுடர் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தண்ணீரில் கலக்கி குடித்தால் போதும் என்கிறார்கள். இரண்டு கட்ட பரிசோதனை மட்டுமே இம்மருந்துக்கு நடைபெற்றிருக்கிறது. 100க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்குக் கொடுத்து பார்த்ததில் பெரும்பாலானோர் வேகமாகக் குணமடைந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கிறது.

அடுத்த வாரம் அறிமுகமாகிறது தண்ணீரில் கலந்துகுடிக்கும் கொரோனா மருந்து!

இந்த மருந்து உடலில் சென்று வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களை இனங்கண்டு அதன் வளர்ச்சியைத் தடுக்கிறது. மேலும் புதிதாக எந்த செல்களும் பாதிக்கப்படாமல் தடுக்கவும் செய்கிறது. இந்த மருந்து குறித்து டிஆர்டிஓ அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “டிஆர்டிஓ அமைப்பு தயாரித்த பவுடர் வடிவ கரோனா தடுப்பு மருந்து 2டிஜி மருந்து அடுத்த வாரம் முறைப்படி அறிமுகமாகிறது. தண்ணீர் கலந்து குடிக்கும் இந்த பவுடர் வடிவ மருந்து முதல் கட்டமாக 10 ஆயிரம் டோஸ்கள் வெளியிடப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும்” என்று கூறப்படுகிறது.