கரையை கடந்தது அம்பன் புயல்!

 

கரையை கடந்தது அம்பன் புயல்!

ஆம்பன் சூறாவளி மேற்கு வங்கம் – வங்கதேசம் இடையே கரையைக் கடந்தது. இந்தப் புயலால் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட இரண்டு கடலோர மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆம்பன் புயலால் கொல்கத்தா, ஹூக்லி, ஹவுரா, தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கானாக்கள் மற்றும் கிழக்கு மிட்னாபூர் ஆகிய மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

கரையை கடந்தது அம்பன் புயல்!

புயல் கரையை கடந்தபோது, மிகக் கடுமையான சூறாவளி புயலாக 185 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில இடங்களில் மணிக்கு  155முதல் 165 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.   1999 ஆம் ஆண்டு ஒடிசாவைத் தாக்கி சுமார் 10,000 பேர் வரை உயிரிழந்த சூப்பர் புயலுக்குப் பின்னர் வங்காள விரி குடாவில் ஏற்பட்ட மிக மோசமான புயல் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆம்பன் அதித் தீவிர புயல் 5 சூறாவளிகளுக்குச் சமமானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் இருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஆம்பன் புயலின் சேதத்தை உடனடியாக சரிசெய்வதற்காக இரு மாநிலங்களின் கரையோரப் பகுதிகளில் 37 தேசியப் பேரிடர் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.