பிரசவ வார்டில் திடீர் தீ விபத்து : குழந்தைகளுடன் அலறி அடித்து ஓடிய தாய்மார்கள்; தஞ்சையில் பரபரப்பு!

பிரசவ வார்டில் திடீர் தீ விபத்து : குழந்தைகளுடன் அலறி அடித்து ஓடிய தாய்மார்கள்; தஞ்சையில் பரபரப்பு!

தஞ்சை மாவட்டம் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையின் பின்புற பக்கத்தில் புதிய பிரசவ வார்டு மாடி கட்டிடம், கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கு பிரசவ வார்டில் சுமார் 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்கும், 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காகவும் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

பிரசவ வார்டில் திடீர் தீ விபத்து : குழந்தைகளுடன் அலறி அடித்து ஓடிய தாய்மார்கள்; தஞ்சையில் பரபரப்பு!

இந்நிலையில் குழந்தைகள் நல வார்டில் பின்புறம் மின் அழுத்தம் காரணமாக மின் கசிவு ஏற்பட்டு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு புகைமூட்டம் உண்டானது. இதனால் குழந்தைகளும் கர்ப்பிணி பெண்களும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர். மேலும் பயந்து போன பெற்றோர்கள் குழந்தைகளை தூக்கிக் கொண்டு கீழே இறங்கி ஓடினர்.

பிரசவ வார்டில் திடீர் தீ விபத்து : குழந்தைகளுடன் அலறி அடித்து ஓடிய தாய்மார்கள்; தஞ்சையில் பரபரப்பு!

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் அங்கிருந்த குழந்தைகள் உடனடியாக மீட்கப்பட்டு வேறு கட்டிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.