தீப்பொறி பறக்கும் ‘நெருப்பு தோசை’ – வைரலாகும் வீடியோ

 

தீப்பொறி பறக்கும் ‘நெருப்பு தோசை’ – வைரலாகும் வீடியோ

நெய் தோசை, பொடி தோசை, மசாலா தோசை, செட் தோசை, ஆனியன் தோசை, காய்கறி தோசை, முடக்கத்தான் தோசை, கறிவேப்பிலை தோசை, கொத்தமல்லை தோசை என்று நம்மூரில் ஏகப்பட்ட தோசை ரகங்கள் உள்ளன. ஆனால், மத்திய பிரதேசத்தில் ‘நெருப்பு தோசை’ என்ற ஒன்று மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தீப்பொறி பறக்கும் ‘நெருப்பு தோசை’ – வைரலாகும் வீடியோ

மத்திய பிரதேசத்தில் இந்தூரில் ஒரு சமையல் கலைஞரின் கைவண்ணத்தில் உருவாகும் நெருப்பு தோசைதான் அம்மாநிலம் முழுவதும் ஒரே பேச்சாக இருக்கிறது.

வழக்கம் போல இந்த தோசையினையும் தோசைக்கல்லில்தான் சுடுகிறர் அந்த சமையல் கலைஞர். ஆனால், அவர் அடுப்புக்கு கீழே காற்றாடியை பிடிக்கிறார். இதனால் அனல் பறக்கிறது. தோசையை சுற்றிலும் அனல் பறக்கிறது. தீப்பொறி பறக்கிறது. கொளுந்து விட்டு எரியும் நெருப்பில் தோசை வேகுவதை பார்ப்பதே ஒரு த்ரில்லான அனுபவம்தான்.

தீப்பொறி பறக்கும் ‘நெருப்பு தோசை’ – வைரலாகும் வீடியோ

தோசைக்கல்லில் மாவை ஊற்றிவிட்டு அதன் மேல் மசாலாப்பொருட்களை தூவுகிறார் அந்த கலைஞர். தக்காளி துருவல், வெங்காய துருவல் போட்டு மசாலாவாக்கி தோசை முழுவதும் தடவுகிறது. தோசையின் குறுக்கு கீறி, மூன்று பாகங்களாக ஆக்குகிறார். தோசையினை எடுக்கும் சமயத்தில் கொத்தமல்லி தூவுகிறார். பின்னர் ஐஸ்கிரீம் தடவுகிறார். பன்னீர் கட்டிகளை வெட்டி தூவுகிறார். பின்னர் தோசையை சுருட்டி எடுத்து உருளை கேக் வடிவத்தில் தட்டில் எடுத்து வைக்கும்போது பீட்சா போலவே இருக்கிறது. சுவையும் பீட்சா போலவே இருக்கிறது.

தீப்பொறி பறக்கும் ‘நெருப்பு தோசை’ – வைரலாகும் வீடியோ

இந்த நெருப்பு தோசைக்காகவே பல கிலோமீட்டர் தூரத்தில் இருப்பவர்களும் வந்து வாங்கிசெல்கிறார்களாம். வாங்கி செல்வதை விட அந்த நெருப்பு தோசை சுடுவதை பார்க்கத்தான் கூட்டம் திரளுகிறது.

தீப்பொறி பறக்கும் ‘நெருப்பு தோசை’ – வைரலாகும் வீடியோ

இந்த வீடியோ இணையங்களிலும் வைரலாகி பலரையும் ரசிக்க வைத்து வருகிறது.