அதிகரிக்கும் காற்று மாசுபாடு: டெல்லியிலும் பட்டாசுக்கு தடை!

 

அதிகரிக்கும் காற்று மாசுபாடு: டெல்லியிலும் பட்டாசுக்கு தடை!

டெல்லியில் அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் நாளை முதல் 30ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் மக்கள் தீபாவளி பண்டிகையை எதிர்நோக்கி காத்துக் கிடக்கின்றனர். இதனால் எல்லா இடங்களிலும் ஷாப்பிங் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக, பட்டாசு விற்பனை அதிகரித்து வருகிறது. இது ஒரு புறமிருக்க டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் காற்று மாசு அதிகரிப்பதால், ராஜஸ்தான், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளன.

அதிகரிக்கும் காற்று மாசுபாடு: டெல்லியிலும் பட்டாசுக்கு தடை!

இந்த நிலையில், டெல்லியிலும் காற்று மாசுபாடு காரணமாக அனைத்து விதமான பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், பட்டாசுகளை தடை செய்யவும் மருத்துவ உள்கட்டமைப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகரிக்கும் காற்று மாசுபாடு: டெல்லியிலும் பட்டாசுக்கு தடை!

டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்கள் பட்டாசுக்கு தடை விதிப்பதால், தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளிகளின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், காற்று மாசுபாடு நேரடியாக நுரையீலை தாக்கும் என்றும் நோயாளிகளை காக்கும் பொருட்டு அரசு இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.