• April
    03
    Friday

Main Area

Main



#Thalapathy63; விஜய் பட செட்டுகள் எரிந்து நாசமானது?!

தளபதி 63
தளபதி 63

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்துக்காக அமைக்கப்பட்டிருந்த செட்டுகள் எரிந்து நாசமானது. பின்னி மில்லில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செட் அமைக்கப்பட்டு விஜய்யின் தளபதி 63 படப்பிடிப்பு வேலைகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து கிண்டி பகுதியில் உள்ள தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கிட்டத்தட்ட 1 மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை அணைத்துள்ளனர்.

sdFsdf

இந்த படத்துக்காக வங்கி, தேவாலயம் போன்ற 63 செட்டுகள் அமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. செட்டுகள் தீயில் கருகி நாசமாகியிருக்கிறது.

தளபதி 63 படத்துக்கு தொடர்ந்து தடை ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் செட்டில் பணிபுரியும் எலக்ட்ரீஷியன் பலத்த காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்பில் தடை ஏற்பட்டது. தற்போது இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
 

2018 TopTamilNews. All rights reserved.