சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து: தீயணைப்பு பணி தீவிரம்!

 

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து: தீயணைப்பு பணி தீவிரம்!

சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

சமீப காலமாக பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் அதிகளவில் வெடி விபத்துகள் நடக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குறுங்குடி கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில், அங்கு தயாரிக்கப்பட்டு வந்த நாட்டு வெடிகள் அனைத்தும் வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானதால், இடிபாடுகளில் சிக்கிய பட்டாசு ஆலை உரிமையாளர் உட்பட 7 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து: தீயணைப்பு பணி தீவிரம்!

அதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட மேலும் 2 பெண்கள் உயிரிழந்தனர். காட்டுமன்னார் கோவில் அருகே நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி நிலையில், தற்போது சிவகாசி அருகே மீண்டும் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து நடந்த சம்பவம் பதைபதைக்க செய்கிறது.

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து: தீயணைப்பு பணி தீவிரம்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இருக்கும் மீனாம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வெடி விபத்தில் உயிரிழப்புகள் நேர்ந்துள்ளதா? உள்ளிட்ட விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.