உடுமலை அருகே தனியார் கயிறு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

 

உடுமலை அருகே தனியார் கயிறு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

திருப்பூர்

உடுமலை அருகே தனியார் கயிறு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ஏரிப்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கும் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொழிலாளர்கள் தண்ணீரை கொண்டு தீயை அணைக்க முயன்ற நிலையில், அந்த முயற்சி தோல்வியடைந்தது.

உடுமலை அருகே தனியார் கயிறு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

இந்த நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, உடுமலை தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அத்துடன், தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் 10-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் தண்ணீரை கொண்டு வந்து அணைக்கும் பணி நடைபெற்றது. இதனையடுத்து, சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் மூல பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து குறித்து ஆலை நிர்வாகம் தரப்பில் அளித்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.