மேட்டூர் அனல் மின்நிலையத்தில் திடீர் தீ விபத்து – மின் உற்பத்தி பாதிப்பு!

 

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் திடீர் தீ விபத்து – மின் உற்பத்தி பாதிப்பு!

சேலம்

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

சேலம் மாவட்டம் மேட்டூரில் 840 மெகாவாட் மற்றும் 600 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரு அனல்மின் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். தேவை குறைவு காரணமாக 600 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தில் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் திடீர் தீ விபத்து – மின் உற்பத்தி பாதிப்பு!

இந்த நிலையில், முதல் பிரிவில் உள்ள கன்வேயர் பெல்ட் பகுதியில் ஏற்பட்ட உராய்வு காரணமாக இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. தீ விபத்து குறிதது தகவல் அறிந்த மேட்டூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் ஊழியர்கள் சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீவிபத்தில், மின் நிலையத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கன்வேயர் பெல்ட் கொண்டு செல்லும் கோபுரம் தீயில் எரிந்து சேதமடைந்தது. தீ விபத்து காரணமாக முதல் பிரிவில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.