மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் திடீர் தீ விபத்து!

 

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் திடீர் தீ விபத்து!

கன்னியாகுமரி

குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலமான மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கேரள மாநில பெண்கள் 41 நாட்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்த கோவிலுக்கு வருவதால், பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படாத நிலையில், கோவில் அர்ச்சகர்கள் வழக்கம்போல் பூஜையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் திடீர் தீ விபத்து!

அதன்படி, இன்று காலை கோவிலில் பூஜை நடைபெற்று கொண்டிருந்த போது, திடீரென கோவிலின் மேற்கூரையில் கருபுகையிடன் தீப்பற்றி எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் மற்ற பகுதிகளுக்கும் பரவியதால், கோவில் ஊழியர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தகவல் அறிந்த குளச்சல் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் திடீர் தீ விபத்து!

தொடர்ந்து, சுமார் 1 மணிநேர போராட்டத்திற்கு பின் அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் கோவிலின் மேற்கூரை எரிந்து சேதடைந்தது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில் பூஜை நடைபெற்றபோது மேற்கூரையில் தீப்பற்றியதால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.