• April
    03
    Friday

Main Area

Main



அங்கிட் சர்மா கொலை தொடர்பாக ஆம் ஆத்மி தாஹிர் உசேன் மீது எப்.ஐ.ஆர்.... வீட்டு மொட்டை மாட்டியில் ஆசிட் பாக்கெட்டுகள்.......

தாஹிர் உசேன்
தாஹிர் உசேன்

வடகிழக்கு டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியில், ஐ.பி. அதிகாரி அங்கித் சர்மா பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அங்கித் சர்மாவின் கொலையின் பின்னணியில் ஆம் ஆத்மியின் கவுன்சிலர் தாஹிர் உசேன் உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனையடுத்து தாஹிர் உசேனுக்கு எதிராக பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்த தொடங்கினர். 

அங்கித் சர்மா

மேலும், பா.ஜ.க. தலைவர் கபில் மிஸ்ரா கூறுகையில், கொலையாளி தாஹிர் உசேன் அங்கித் சர்மாவை மட்டுமல்லாமல் 4 இதர பையன்களையும் இழுத்து சென்றார். அவர்களில் 3 பேர் இறந்து கிடந்தனர். வீடியோவில், தாஹிர் உசேன் முகமூடி அணிந்த சிறுவர்களுடன் குச்சிகள், கற்கள், தோட்டாக்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் எடுத்து  செல்வதை பார்க்கலாம். தாஹிர் உசேன் தொடர்ந்து கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்களுடன் பேசி கொண்டு இருந்தார் என தெரிவித்தார்.

கபில் மிஸ்ரா

இதற்கிடையே தாஹிர் உசேனை ஆம் ஆத்மி கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அங்கித் சர்மா கொலை தொடர்பாக, தாஹிர் உசேன் மீது தயால்புர் காவல் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். நேற்று காலையில் தாஹிர் உசேன் வீட்டிலிருந்து பெட்ரோல் குண்டுகள் மற்றும் கற்கள் நிரப்பட்ட சாக்குகளை போலீசார் கைப்பற்றினர். மேலும் உசேன் வீட்டு மொட்டை மாடியிலிருந்து ஆசிட் பாக்கெட்டுகளையும் போலீசார் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

2018 TopTamilNews. All rights reserved.