யானையை மட்டுமல்ல, அங்கு பறவை, நாய்களையும் கொலை செய்கின்றனர்! மேனகா காந்தி மீது வழக்கு

 

யானையை மட்டுமல்ல, அங்கு பறவை, நாய்களையும் கொலை செய்கின்றனர்! மேனகா காந்தி மீது வழக்கு

கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் பேசியதாக முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி மீது கேரளாவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரத்தில் வனத்திலிருந்து உணவுத்தேடிவந்த கர்ப்பம் தரித்த யானைக்கு மர்ம நபர்கள் சிலர் அன்னாசி பழத்துக்குள் பட்டாசுகளை மறைத்துவைத்து வழங்கியுள்ளனர். அதை சாப்பிட்ட யானை பட்டாசு வெடித்து உயிரிழந்தது. இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கேரளாவில் யானை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில வனத்துறை ட்விட்டரில் பதிவிட்டது.

யானையை மட்டுமல்ல, அங்கு பறவை, நாய்களையும் கொலை செய்கின்றனர்! மேனகா காந்தி மீது வழக்கு

பெண் யானை உயிரிழந்த விவகாரம் தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டிருந்த மேனகா காந்தி, மலப்புரம் மாவட்டம் இதுபோன்ற சம்பவங்களுக்கு பெயர் பெற்றது என்றும், அங்கு சாலைகளில் நஞ்சை போட்டு ஒரே நேரத்தில் 300 முதல் 400 பறவைகள் மற்றும் நாய்களை கொலை செய்கின்றனர் எனவும் பதிவிட்டிருந்தார். இங்கு சுமார் 600 யானைகள் கால்களை உடைத்து அடித்து பட்டினியால் வாட வைத்து கொல்லப்பட்டுள்ளதாகவும் மேனகா காந்தி குற்றம்சாட்டினார். இந்நிலையில் மலப்புரம் மாவட்டத்தை களங்கப்படுத்த முயற்சிக்கிறார் என கூறி 5 அமைப்புகள் மேனகா காந்தி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளன. இதனையடுத்து இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153இன் கீழ், கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.