சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவபடிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத வழங்கும் சட்ட மசோதவிற்கு அனுமதி அளிக்காத ஆளுநரை கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 3500 திமுகவினர் மீது கிண்டி காவல் நிலையத்தில் 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக கூடுதல், கூட்டத்தினர் கலைந்து போகச் சொல்லியும் கலையாமல் இருப்பது, உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயை அநேகமாக பரப்பக்கூடிய கவனக்குறைவான செயலில் ஈடுபடுதல், நகர காவல் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.