“உத்தவ் தாக்கரே கன்னத்துல சப்புனு அறைஞ்சிருவேன்” – திமிர் பேச்சால் கைதாகும் மத்திய அமைச்சர்?

 

“உத்தவ் தாக்கரே கன்னத்துல சப்புனு  அறைஞ்சிருவேன்” – திமிர் பேச்சால் கைதாகும் மத்திய அமைச்சர்?

மகாராஷ்டிராவில் பாஜகவுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைத்தது சிவசேனா. தன்னைப் பகைத்துக் கொண்டவர்கள் எவரும் அரசியலில் நிம்மதியாக இருக்கக் கூடாது என்பது போலவே பாஜக சிவசேனாவிடம் நடந்துகொள்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியில் தீவிர கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சமயம் கூட மகாராஷ்டிரா கேட்ட உதவிகளை உதாசீனப்படுத்தியது மத்திய பாஜக அரசு. இதனால் இரு கட்சித் தலைவர்களும் மாறி மாறி திட்டி தீர்த்து வருகின்றனர்.

இச்சூழலில் கடந்த சுதந்திர தின விழாவின்போது மகாராஷ்டிர மக்களுடன் உரையாற்றிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இந்தியா சுதந்திரம் அடைந்த ஆண்டை (1947) மாற்றி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இது சமூக வலைதளங்களில் விமர்சனங்களை எழுப்பியது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நாராயண் ரானே, “நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டை ஒரு மாநில முதலமைச்சர் அறியாதது வெட்கக்கேடான செயல். அவர் உரையாற்றிய இடத்தில் நான் இருந்திருந்தால் தாக்கரேவின் கன்னத்தில் அறை கொடுத்திருப்பேன்” என்றார்.

“உத்தவ் தாக்கரே கன்னத்துல சப்புனு  அறைஞ்சிருவேன்” – திமிர் பேச்சால் கைதாகும் மத்திய அமைச்சர்?

தாக்கரேயின் தவறுதலான பேச்சு போய் தற்போது நாராயணன் ரானே பேசுபொருளாகியிருக்கிறார். உரையாற்றும்போது எப்போதும் ஒருசில வார்த்தைகள் தவறுதலாக வரும்; இது சகஜமான ஒரு நிகழ்வு தான். இதைப் பெரிதாக எடுத்துக்கொண்டு ஒரு மாநில முதலமைச்சரின் கன்னத்தில் அறைவேன் என சொல்லலாமா என நாராயண் ரானே மீது நெட்டிசன்கள் விமர்சனத்தை முன்வைத்தனர். சிவசேனா தொண்டர்களும் ரானேவை சோசியல் மீடியாக்களில் பொளந்துகட்டி வருகின்றனர். அதேபோல அவர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிரா காவல் துறையும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

“உத்தவ் தாக்கரே கன்னத்துல சப்புனு  அறைஞ்சிருவேன்” – திமிர் பேச்சால் கைதாகும் மத்திய அமைச்சர்?
நாரயணன் ரானே

முதலமைச்சரை இழிவுப்படுத்தியதாகக் கூறி அவர் மீது எஃப்ஐஆர் பதவி செய்துள்ளனர் நாசிக் சைபர் போலீஸார். இதனால் அவர் விரைவில் கைதாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாராயண் ரானே தன்ன்னுடைய அரசியல் வாழ்க்கையை சிவசேனாவிலிருந்தே தொடங்கினார். 1990ஆம் ஆண்டு சிவசேனா எம்எல்ஏவான ரானே, 1999ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் முதலமைச்சராகும் அளவிற்கு உயர்ந்தார். பால் தாக்கரே உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2005ஆம் ஆண்டு சிவசேனாவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். 2017ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்தும் விலகி பாஜகவில் இணைந்து தற்போது மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சராகியிருக்கிறார்.