darbar
  • January
    18
    Saturday

Main Area

Main



பிக்சல் போனில் பக் கண்டுபிடிங்க... ரூ.7 கோடி அள்ளுங்க... கூகுளின் அறிவிப்பு ஏற்படுத்திய அதிர்ச்சி!

பிக்சல்
பிக்சல்

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போனில் உள்ள பாதுகாப்பு குறைகளை கண்டுபிடிப்பவர்களுக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.7.18 கோடி) பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மொபைல் போனில் உள்ள குறைபாடுகள் வெளிப்பட்டு வருவதால் அந்த போனை பயன்படுத்துபவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

google

கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போனை வைத்திருப்பவர்களின் மொபைல் போன் கேமராவை வைத்தே அவரை உளவு பார்க்க முடியும் என்று பாதுகாப்பு நிபுணர் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இதனால் உலகெங்கும் பிக்சல் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து பிக்சல் ஸ்மார்ட்போனில் உள்ள பாதுகாப்பு குறை பக்-கை கண்டறிபவர்களுக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர் பரிசளிக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட டெவலப்பர் ப்ரிவ்யூ வெர்ஷனில் ஏதேனும் பிரச்னையை கண்டறிந்தால் அவர்களுக்கு கூடுதலாக 50 சதவிகித போனஸ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. 

google

ஆப்பிள் போனில் உள்ளது போன்றே ஸ்மார்ட் போன்களில் டைட்டன் டி என்ற செக்யூரிட்டி சிப் உள்ளது. இது யாராவது மால்வேர் உள்ளிட்டவற்றை மொபைல்போனில் பதிவிறக்கம் செய்ய முயன்றால் அது தானாகவே செயல்படத் தொடங்கிவிடும். எனவே அது பாதுகாப்பானதுதான் என்று பிக்சல் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த முயன்றுள்ளது கூகுள்.
இப்படி மென்பொருள், ஆன்ட்ராய்டில் உள்ள பக்-கை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசளிக்கும் முறையை கூகுள் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. 38 ஆயிரம் அமெரிக்க டாலர் என்ற அளவிலிருந்த இந்த திட்டம் தற்போது ஒரு மில்லியன் என்ற அளவுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

2018 TopTamilNews. All rights reserved.