2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது நிறுத்தப்பட்டுள்ளதா? நிதியமைச்சகம் விளக்கம்!

2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது நிறுத்தப்பட்டுள்ளதா? நிதியமைச்சகம் விளக்கம்!

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்திவைத்திருப்பது குறித்து நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி நள்ளிரவு பணமதிப்பு நடவடிக்கை அமலானது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தது. பணமதிப்பிழப்பால் பணத்தை மாற்ற முடியாமல் கட்டுக் கட்டாக 1000 ரூபாய் நோட்டுகள் கால்வாய்களிலும், குப்பைகளிலும் கொட்டப்பட்ட சம்பவங்கள் ஏராளம்.

2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது நிறுத்தப்பட்டுள்ளதா? நிதியமைச்சகம் விளக்கம்!

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் 2000 நோட்டுகள் அச்சடிக்கப்படுவது நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர், மக்களின் தேவைக்கு ஏற்றாற்போல தான் நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறது என்றும் அதனை நிறுத்தும் திட்டங்கள் இப்போதைக்கு ஏதும் இல்லை என்றும் தெரிவித்தார்.

2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது நிறுத்தப்பட்டுள்ளதா? நிதியமைச்சகம் விளக்கம்!

கடந்த ஆண்டு புழக்கத்தில் இருந்த 32,910 லட்சம் 2,000 ரூபாய் நோட்டுகள் இந்த ஆண்டு 27,398 கோடியாக குறைந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அச்சடிக்கும் பணி தளர்வுகள் அளிக்கப்பட்டதும் மீண்டும் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.