நிதிப் பற்றாக்குறை குறித்து கவலைப்படத் தேவையில்லை – நிதியமைச்சர் நம்பிக்கை!

 

நிதிப் பற்றாக்குறை குறித்து கவலைப்படத் தேவையில்லை – நிதியமைச்சர் நம்பிக்கை!

நிதிப் பற்றாக்குறை குறித்து கவலைப்படத் தேவையில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு, திட்டங்களுக்கு போதுமான நிதியை செலவிட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை அதிகரித்து வருவது குறித்து கவலைப்படத் தேவையில்லை என கூறியுள்ளார். பொருளாதாரத்தை மீட்பதற்கான விரைவான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதனால் நிதி நிலைமை குறித்து அச்சப்பட தேவையில்லை எனக் கூறினார். நமது தேவைகள் என்ன, நாம் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பது குறித்து தெளிவான திட்டம் உள்ளதால் அச்சப்படத் தேவையில்லை என குறிப்பிட்டார்.

நிதிப் பற்றாக்குறை குறித்து கவலைப்படத் தேவையில்லை – நிதியமைச்சர் நம்பிக்கை!

கடந்த 15 நாட்களில் அரசு செலவுகளை ஒப்பிட்டுப் பாருங்கள், மாநிலங்களுக்கு தேவையான நிதிகளை கொடுத்து வருகிறோம் என குறிப்பிட்டார். கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பிறகு ஏற்பட்டுள்ள வேலை இழப்பு, பொருளாதார இழப்புகளை ஈடு கட்டுவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலக அளவில் சுமார் 12 லட்சம் கோடி டாலர் அளவுக்கு பொருளாதார தேக்க நிலை நிலவுகிறது. எனவே உலக அளவிலான பாதிப்புகள் சரியாகும்போது, இந்தியாவில் நிலவும் தேக்க நிலையும் குறையும் என கூறினார். இந்திய பொருளாதாரம் வளர்ச்சி தற்போதைய கணிப்பை விட இரண்டு மடங்கு வளர்ச்சியை எட்டும் என்றும் கூறினார்.

நிதிப் பற்றாக்குறை குறித்து கவலைப்படத் தேவையில்லை – நிதியமைச்சர் நம்பிக்கை!

மத்திய அரசுக்கான வரி வருவாய் குறைவு, கூடுதல் செலவினங்கள் காரணமாக நடப்பு நிதி ஆண்டின் நிதி பற்றாக்குறை அதிகரித்து வருவதாக பொருளாதார வல்லுனர்கள் கூறிவருகின்றனர். அதனால், அடுத்த ஆண்டில் பட்ஜெட்டில் பல்வேறு புதிய வரி விதிப்புகள் இருக்கலாம் என எதிர்பார்ப்பு உள்ளது. தற்போதைய சூழலில், அடுத்த ஆண்டு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் எப்படி இருக்கும் என பதில் சொல்ல முடியாது என்றும், மிக நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறோம். அதனால் கூடுதல் கவனம் கொடுத்து பட்ஜெட் தயாரிப்பு இருக்கும் என்றும் நிர்மலா சீதாரானம் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார மீட்சிக்கு உகந்த வழிகள் பட்ஜெட்டில் இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார். பொருளாதாரத்தை மீட்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளும், தொழில் துறைக்கு கடன் உத்தரவாதம் உள்ளிட்ட நடவடிக்கைகளும் வரும் பட்ஜெட்டில் இருக்கலாம் என தொழில்துறை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.