• February
    19
    Wednesday

Main Area

Main



பொருளாதார சிக்கலுக்கு பல்வேறு சலுகைகள் அறிவித்தார் நிர்மலா!


பொருளாதார சிக்கலுக்கு மத்திய அரசு எடுத்துள்ள எதிர்வினைகள் மற்றும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் குறித்து 32 ஸ்லைடுகளைக் கொண்ட பிரசண்டேஷன்மூலம் செய்தியாளர்களிடம் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் விளக்கியதன் தொடர்ச்சி:

 

பங்கு முதலீடுகளுக்கு விதிக்கப்பட்ட சர்சார்ஜ் வரி நீக்கப்படுகிறது

நிலுவையில் இருக்கும் அனைத்து வருமானவரி நோட்டீஸ்களுக்கும் அக்டோபர் முதல் தேதிக்குள் தீர்வு காணப்படும். அதற்குள் தீர்வு காணப்படாவிட்டால், அந்த நோட்டீஸ்கள் செல்லாததாகிவிடும்.

ஆதாரை அடிப்படையாகக் கொண்ட வாடிக்கையாளர் தகவல் சரிபார்ப்புக்கு வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்படும்.

மத்திய அரசிடம் பதிவுபெற்ற ஸ்டார்டப் நிறுவங்னங்களுக்கு கிடைக்கும் முதலீடுகளுக்கு விதிக்கப்பட்ட ஏஞ்சல் டேக்ஸ் ரத்து

ரெப்போ வட்டி விகிதத்துடன் கடன்களை இணைக்க வங்கிகள் ஒப்புதல் அளித்துள்ளதால், கடன்களுக்கான தவணை குறையும்.

கடன் கட்டிமுடித்த 15 நாட்களுக்குள் உரிய ஆவணங்கள் திருப்பித் தரப்படும்.

சி.எஸ்.ஆர். வழக்குகள் இனிமேல் கிரிமினல் வழக்குகளாக இல்லாமல், சிவில் வழக்காக நடத்தப்படும்.

2018 TopTamilNews. All rights reserved.