“இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யும் திட்டமில்லை ” நீதிமன்றத்தில் யுஜிசி தகவல்

 

“இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யும் திட்டமில்லை ” நீதிமன்றத்தில் யுஜிசி தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அரசு அறிவுறுத்தியது. அதன் படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே பொறியியல், தொழில்கல்வி உள்ளிட்ட அனைத்து பட்டப்படிப்புகள் தேர்வை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. அதனால் முதலாம், இரண்டாம் ஆண்டு கலை, அறிவியல் இளங்கலை படிப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

“இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யும் திட்டமில்லை ” நீதிமன்றத்தில் யுஜிசி தகவல்

இறுதியாண்டு தேர்வு கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து 31 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, யுஜிசி சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை என்றும் தேர்வுகளை ரத்து செய்தால் மாணவர்களின் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.