‘இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்’ – யுஜிசி திட்டவட்டம்!

‘இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்’ – யுஜிசி திட்டவட்டம்!

கல்லூரிகளில் இறுதி ஆண்டு செமெஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் யுஜிசி பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

‘இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்’ – யுஜிசி திட்டவட்டம்!

கொரோனா அச்சுறுத்தலால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் நிலவிய நிலையில், செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், இறுதியாண்டு மாணவர்களின் தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை. அரியர் தேர்ச்சியை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தொடர்ந்த வழக்கு, விசாரிக்கப்பட்டு வருகிறது.

‘இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்’ – யுஜிசி திட்டவட்டம்!

இந்த நிலையில், அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என யுஜிசி பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. அதில், இறுதியாண்டு செமெஸ்டர் தேர்வுகள் நடத்த முடியாவிட்டால் அவகாசம் கோரலாம் என்றும் தேர்வுகளை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம், அரியர் தேர்ச்சி யுஜிசி விதிகளுக்கு எதிரானது என தெரிவித்திருந்தது. மேலும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த அரசின் உத்தரவு ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கும் எதிரானது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.