இறுதி டி20 போட்டி – இந்திய அணியில் யாரெல்லாம் இருப்பார்கள்?

 

இறுதி டி20 போட்டி – இந்திய அணியில் யாரெல்லாம் இருப்பார்கள்?

இந்திய கிரிகெட் அணிக்கு மூன்றாவது வெற்றி கிடைக்குமா என்பது இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்துவிடும்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில் டி20, டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் ஆட திட்டமிட்டுள்ளது. இதில் முதலில் நடந்த ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது. அதன் மூன்றாவது போட்டியில் தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.

இறுதி டி20 போட்டி – இந்திய அணியில் யாரெல்லாம் இருப்பார்கள்?

அடுத்து தொடங்கிய டி20 போட்டித் தொடரில் இதுவரை 2 போட்டிகள் முடைவடைந்திருக்கின்றன. அவற்றில் இரண்டிலுமே இந்தியாவே வென்றிருக்கிறது. இரண்டு போட்டிகளிலும் தமிழகத்தின் நடராஜன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு பெரும் பங்களிப்பு செய்தனர். இதனால், டி20 போட்டித் தொடரை இந்தியா வென்று விட்டது.

டி20 போட்டித் தொடரில் இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதம் உள்ளது. அது இன்று மதியம் 1.40 மணிக்குத் தொடங்குகிறது. இதிலும் இந்தியா வென்று ஆஸ்திரேலியாவை வாஷ் அவுட் செய்யவே ஆசைப்படுகிறது.

இறுதி டி20 போட்டி – இந்திய அணியில் யாரெல்லாம் இருப்பார்கள்?

இன்றைய போட்டியில் இந்திய அணியில் யாரெல்லாம் இடம்பெறக்கூடும். ஓப்பனிங் கே.எல்.ராகுல் – தவான் ஜோடி நன்றாக இருக்கிறது. ஆயினும், மயங் அகர்வாலுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக இன்று அவர் களம் இறக்கப்படலாம்.

ஷிகர் தவானை நீக்காது, சஞ்சு சாம்சனுக்கு ஓய்வளித்து தவானைப் பயன்படுத்தக்கூடும். பவுலிங்கில் பும்ரா மற்றும் ஷமி இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். அப்படியெனில் ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் இருவரில் யாருக்கு ஓய்வு என்பது கோலியின் கையில்தான் இருக்கிறது.

இறுதி டி20 போட்டி – இந்திய அணியில் யாரெல்லாம் இருப்பார்கள்?

நடராஜன் டீமில் இடம்பெறுவதில் பெரிய மாற்றம் இருக்காது. இன்று அவர் விக்கெட்டுகள் 2 அல்லது 3 எடுக்கும்பட்சத்தில் தொடர் நாயகன் பட்டம் வெல்லவும் வாய்ப்பிருக்கிறது.

இந்திய அணியில் இதைத் தவிர்த்து வேறு மாற்றங்கள் இருக்க வாய்ப்பு குறைவு. ஜடேஜா காயத்திலிருந்து மீள வில்லை என்பதால் அவர் ஆட வாய்ப்பில்லை. கோலி, ஹிர்திக், சுந்தர், சஹல் ஆகியோர் இருப்பார்கள்.