“இறுதி தேர்வுகள் எழுதாத மாணவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது” : உச்ச நீதிமன்றத்தில் யுஜிசி வாதம்!

“இறுதி தேர்வுகள் எழுதாத மாணவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது” : உச்ச நீதிமன்றத்தில் யுஜிசி வாதம்!

கொரோனா பரவல் காரணமாக பொறியியல், தொழில்கல்வி உள்ளிட்ட அனைத்து பட்டப்படிப்புகள் தேர்வை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் காரணமாக முதலாம், இரண்டாம் ஆண்டு கலை, அறிவியல் இளங்கலை படிப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

“இறுதி தேர்வுகள் எழுதாத மாணவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது” : உச்ச நீதிமன்றத்தில் யுஜிசி வாதம்!

மேலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவித்தது. இதை எதிர்த்து 31 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

“இறுதி தேர்வுகள் எழுதாத மாணவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது” : உச்ச நீதிமன்றத்தில் யுஜிசி வாதம்!

இந்நிலையில் இறுதியாண்டு தேர்வு கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வாதிட்ட யுஜிசி, ” இறுதித் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். இறுதி தேர்வுகள் எழுதாத மாணவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது என்றும் வாதிட்டுள்ளது. கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் தொடர்பாக மாநில அரசுகள் முடிவு எடுக்க முடியாது. மாநில அரசுகளின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க முடியாது . மகாராஷ்டிரா , டெல்லி உள்ளிட்ட மாநில அரசுகள் விதிகளை மீறி தானாக தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளன. விதிமீறல் குறித்து விசாரணைநடத்த வேண்டும் எனவும் யுஜிசி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.