கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடக்குமா? மத்திய அரசு பதில்!

 

கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடக்குமா? மத்திய அரசு பதில்!

நாடாளுமன்றத்தில், கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுமா என எம்.பிக்கள் கேள்வி எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) கடந்த 1952ம் ஆண்டு முதல் எல்லா ஆண்டுகளும் நடத்தப்பட்டு வருகிறது. மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வரும் இந்த விழா, இந்த ஆண்டு கோவாவில் வரும் நவம்பர் மாதம் 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா பாதிப்பால் இந்த விழா நடைபெறுமா என கேள்வி எழுந்தது.

கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடக்குமா? மத்திய அரசு பதில்!

இது குறித்து பேசிய கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் , சர்வதேச திரைப்பட விழா திட்டமிட்டப்படி நடைபெறும் என அறிவித்தார். அதே போல, தகவல் மற்றும் ஒளிபரப்புக்கு மத்திய அரசு அறிவுறுத்திய எல்லா வழிகாட்டுதல்களும் முறையாக பின்பற்றப்படும் என கூறியிருந்தார். இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் வைகோ மற்றும் சுரேஷ் ரெட்டி கோவாவில் திரைப்பட விழா நடைபெறுமா என கேள்வி எழுப்பினர்.

அதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், கொரோனா சூழலை ஆய்வு செய்த பிறகே நவம்பரில் சர்வதேச திரைப்பட விழா நடத்துவது பற்றி முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.