தலைவர்கள் கைது… கொந்தளிக்கும் மக்கள்! போராட்ட களமானது தாய்லாந்து

தலைவர்கள் கைது… கொந்தளிக்கும் மக்கள்! போராட்ட களமானது தாய்லாந்து

தாய்லாந்து நாடே போராட்டக் களமாக மாறிவிட்டதோ என்று எண்ண வைக்குமளவு அங்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு போராடி வருகின்றனர்.

2014 ஆண்டில் அதிரடி நடவடிக்கை மூலம் ஆட்சியைப் பிடித்தவர் அப்போதைய தளபதியாக இருந்த பிரயுத் சன் ஒச்சா. அவர் மீதான வெறுப்பும், கோபமும் தாய்லாந்து மக்களிடம் எப்பவும் இருந்து வந்தது.

தலைவர்கள் கைது… கொந்தளிக்கும் மக்கள்! போராட்ட களமானது தாய்லாந்து
Prayut Chan-o-cha

இந்நிலையில் 2019 ஆம் தாய்லாந்தில் தேர்தல் நடந்தது. அதில் பிரயுத் சன் ஒச்சா பிரதமாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது பலருக்குமே அதிர்ச்சியாக இருந்தது. அந்தத் தேர்தல் நடத்தப்பட்ட விதம் குறித்து கடும் விமர்சனம் முன் வைக்கப்பட்டன.

தலைவர்கள் கைது… கொந்தளிக்கும் மக்கள்! போராட்ட களமானது தாய்லாந்து
PC: Twitter

இவையெற்றால் கொஞ்சமும் அக்கறைக்கொள்ளாமல் தாய்லாந்து மன்னர் வெளிநாட்டில் உல்லாசமாகப் பொழுதைப் போக்கினார். இவையெல்லாம் மக்களின் கோபத்தைக் கொதிக்க வைத்தது. இந்தக் கொடூரத்திற்கு எதிராக திரண்ட ஜனநாயகத் தலைவர்களை ஆளும் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அதில் பெண் செயற்பாட்டாளர் பனுசாயாவும் அடக்கம்.

தலைவர்கள் கைது… கொந்தளிக்கும் மக்கள்! போராட்ட களமானது தாய்லாந்து
PC: Twitter

இந்நிலையில் தன் தந்தையின் நினைவு நாளுக்கு இல்லம் திரும்பிய மன்னரின் காரைச் சுற்றி வளைத்து போராட்டம் நடத்தினர் மக்கள்.

நான்கு பேருக்கு மேல் சேரக்கூடாது என்று அவசர நிலை அறிவிக்கப்பட்டது. ஆனால், அதையெல்லாம் மக்கள் பொருட்படுத்தவே இல்லை. மாணவர்களும் பொதுமக்களும் திரண்டு தாய்லாந்தையே ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டத்தைத் தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.

Head PC: Twitter