வானதி சீனிவாசன் பங்கேற்ற நிகழ்ச்சியில் கைகலப்பு… பெண்ணுடன் கட்சி நிர்வாகிகள் ரகளை!

 

வானதி சீனிவாசன் பங்கேற்ற நிகழ்ச்சியில் கைகலப்பு… பெண்ணுடன் கட்சி நிர்வாகிகள் ரகளை!

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6,9 என இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கட்சிகள் கூட்டணி குறித்து பேசிக் கொண்டிருக்கின்றன. அதேபோல யாரெல்லாம் போட்டியிட விரும்புகிறார்களோ அவர்களிடம் விருப்ப மனுவையும் பெற்று வருகின்றன. அந்த வகையில் பாஜக சார்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சி கூடுவாஞ்சேரியில் இன்று நடைபெற்றது.

வானதி சீனிவாசன் பங்கேற்ற நிகழ்ச்சியில் கைகலப்பு… பெண்ணுடன் கட்சி நிர்வாகிகள் ரகளை!

இந்நிகழ்ச்சியில் பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டார். இதில் ஆண்கள், பெண்கள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிவிட்டு விருப்ப மனுக்களைப் பெறும் நிகழ்வை வானதி சீனிவாசன் தொடங்கிவைத்தார். கூட்டத்தின் முடிவில் வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கூட்டத்தில் சலசலப்பு உண்டானது. மீனாட்சி என்ற பெண்மணி மீது அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் திட்டிக்கொண்டே அவர் மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.

வானதி சீனிவாசன் பங்கேற்ற நிகழ்ச்சியில் கைகலப்பு… பெண்ணுடன் கட்சி நிர்வாகிகள் ரகளை!

இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே மாவட்ட தலைவர் பலராமன் தலையிட்டு அப்பெண்ணை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார். மீண்டும் திரும்பி வந்த அப்பெண் மண்டபத்திற்குள் நின்ற கட்சி நிர்வாகிகள் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. நிர்வாகிகள் ஏன் அவரைத் தாக்கினர் என தெரியவில்லை. என்ன சம்பவம் கூட்டத்திற்குள் நடந்திருக்கும் என்பதும் தெரியவில்லை. இதுகுறித்து வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, சம்பவம் தொடர்பாக மாவட்ட தலைவரிடம் விசாரித்து அறிக்கை தருமாறு கேட்டுள்ளதாக தெரிவித்தார்.