Home ஆன்மிகம் நவராத்திரி ஐந்தாம் நாள்: சகல ஐஸ்வரியத்தையும், புத்திரபாக்கியத்தையும் தருவாள் தேவி ஸ்கந்த மாதா!

நவராத்திரி ஐந்தாம் நாள்: சகல ஐஸ்வரியத்தையும், புத்திரபாக்கியத்தையும் தருவாள் தேவி ஸ்கந்த மாதா!

அம்பிகையின் அருட்கொடையாய் விளங்கும் நவராத்திரி உற்சவ நாட்களில் பராசக்தியே துர்க்கையாகி தீமைகளை அழிக்கிறாள். மகாலட்சுமியாகி செல்வங்களை வாரி வழங்குகிறாள். சரஸ்வதியாகி நல்ல புத்தியையும், பக்தியையும் அளிக்கின்றாள். புத்தி, பக்தி, சித்தி இம்மூன்றும் அடைய உதவும் அம்பிகையை இந்நவராத்திரில் வணங்கி அனைத்து வழங்களையும் பெறுவோம். நவராத்திரியின் ஐந்தாவது நாளான பஞ்சமி திதியில் நாம் வழிபடவேண்டிய தெய்வம் பரமேஸ்வரி. பரமேஸ்வரனின் சக்தி என்பதால் இவள்

பரமேஸ்வரி என்றும், கந்தப்பெருமானின் அன்னையானதால் ஸ்கந்த மாதா என்றும் அழைக்கப்படுகிறாள். தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் மனிதர்களுக்கும், தொல்லை கொடுத்த தாரகாசுரனை (சூரபத்மனை) கொன்றவர் அம்பிகை தேவசேனாபதியாகிய முருகப்பெருமான். அத்தகைய முருகனின் தாயான இவள் மிகவும் மதிக்கப்படுகிறாள்.
இவள் நான்கு கரங்களை கொண்டவள். இரண்டு கரங்களில் தாமரை மலரை கொண்டவள். ஒரு கரம் பக்தருக்கு ஆசி வழங்கும். இவளின் மடியில் ஸ்கந்தன் குழந்தை வடிவாக ஆறுமுகத்தோடு காட்சி தருவான். அன்னையை சிங்கம் தாங்கி நிற்கும். இவள் சில நேரங்களில் தாமரை மலர் மீது அமர்ந்து தவம் செய்பவளாக காட்சி தருவாள். அதனால் இவளை ‘பத்மாசினி’ என்றும் கூறுவர்.

இவளின் வடிவம் பக்தரை மெய்மறக்க செய்யும். இவள் தூய்மையின் வடிவானவள். இவளை வணங்குவோர் மனமும், ஆத்மாவும் அமைதி பெறும். அவர்கள் தன்னுடைய துக்கங்களை மறப்பர். வாழ்வில் இறை இன்பத்தை அனுபவிப்பர். இவளின் ஆசிகள் உண்மையான வேண்டுதல்களை நிறைவேற்றும். தன்னை நம்புவோரை இவள் என்றும் கைவிட மாட்டாள். இவளின் அருள் மோட்சத்திற்கு இட்டுச் செல்லும் என்று நம்புகின்றனர். இவளை வழிபடும் ஐந்தாவது நாளுக்கு உரிய குமாரி சண்டிகா தேவியாவள். மந்திரம் – ஓம் சண்டிகாயை நம; சுவாசிநியின் பெயர் – ஸ்கந்தமாதா, மந்திரம் – ஓம் ஸ்கந்த மாதாயை நம: இன்று, கடலை மாவைக் கொண்டு பறவையினக் கோலம் போட்டு, சந்தனத்தால் பொட்டு வைத்து, சந்தன இலைகளால் அல்லது சந்தன மல்லி பூவால் அலங்கரித்து, பாரிஜாத மலர், பவளமல்லி, பிச்சிப்பூ, மரிக்கொழுந்து, வில்வ இலை, சாம்பல் நிற இலைகளைக் கொண்டு பூஜித்தால் அதிக பலன்களை தரும். இன்றைய தினம் ஆறு வயது சிறுமிகளை நம்மால்

முடிந்த அளவு ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டுக்கு அழைத்து, அவர்களை ‘சண்டிகா’ என்ற திருப்பெயருடன் வழிபடவேண்டும். அம்பிகைக்கு தயிர் சாதமும், ஏதேனும் ஒரு நவதானியம் கொண்டு சுண்டலும் செய்து அம்பிகைக்கு நைவேத்தியமாக படைக்க வேண்டும். நைவேத்தியம் செய்ததை அனைவருக்கும் அம்பிகையின் பிரசாதமாகக் கொடுக்கவேண்டும். இன்று நாம் அம்பிகையை வழிபடுவதால், சகல ஐஸ்வர்யங்களும் கிடைப்பதுடன், புத்திரபாக்கியமும் தந்தருள்வாள். இந்நாளில் யோகிகள் ‘விசுத்தி’ சக்கரத்தை அடைவர். விசுத்தி என்றால் கலப்படம் இல்லாதது, தூய்மையானது என பொருள் வரும். இவள் அருள் கொண்டு இந்த சக்ரத்தை அடைவோரின் மனம் தூய்மையான கருத்துக்களால் நிறையும். இவளை சரண் அடைந்தோரின் மனதில் இருந்து தூய்மையில்லாத கருத்துக்கள் வெளியேறி விடும்.

மற்ற எந்த தேவிகளுக்கும் இல்லாத சிறப்பு இவளுக்கு உண்டு. இவளை வழிபடும் போது நாம் முருகனையும் சேர்த்து வணங்குகிறோம். இவளின் தியான மந்திரம்

“சின்ஹாசன் கட நித்யம் பத்மஸ்ரித் கர்தவ்ய
சுபதஸ்து சதா தேவி ஸ்கந்த மாதா யஷஷ்வினி”
தன் இருகரங்களில் தாமரை மலர் ஏந்தியவளும், சிம்மாசனத்தில் அமர்ந்து இருப்பவளும், ஸ்கந்தனின் தாயாகவும் இருக்கும் தேவி துர்க்கையை நான் வணங்குகின்றேன் என்ற பொருளாகும். அம்பிகையை வணங்கி அவளின் பரிபூரண அருளைப் பெறுவோம். ஓம் சக்தி! பராசக்தி!! ஓம் ஆதிபராசக்தி!!!–வித்யா ராஜா

மாவட்ட செய்திகள்

Most Popular

இரவு ஊரடங்கால் உற்சாகமான திருடர்கள்… குஜராத்தில் கடைகளை உடைத்து பல லட்சம் பொருட்கள் கொள்ளை

குஜராத்தில் அமலில் உள்ள இரவு ஊரடங்கை பயன்படுத்தி, கடைகளை உடைத்து பல லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி,...

நம் நாட்டில் ஊழல் அதிகரித்துள்ளதாக 47 சதவீத மக்கள் தகவல்… ஆய்வு முடிவு

நம் நாட்டில் கடந்த 12 மாதங்களில் ஊழல் அதிகரித்துள்ளதாக கருத்து கணிப்பில் ஒன்றில் 47 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம் ஆசிய பிராந்திய...

கனமழையால் வானகரம் பூமார்க்கெட் மேற்கூரை சேதம்

சென்னை சென்னையில் சூறைக் காற்றுடன் பெய்த கனமழையால் வானகரம் பூ மார்க்கெட் மேற்கூரையில் இருந்த இரும்பு தகடுகள் காற்றில் தூக்கி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Do NOT follow this link or you will be banned from the site!