கொடைக்கானல் டம்டம் பாறை அருகே வேன் கவிழ்ந்ததில், சென்னையை சேர்ந்த 15 பேர் படுகாயம்!

 

கொடைக்கானல் டம்டம் பாறை அருகே வேன் கவிழ்ந்ததில், சென்னையை சேர்ந்த 15 பேர் படுகாயம்!

தேனி

கொடைக்கானல் அடுத்த டம்டம் பாறை பகுதியில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் சென்னையை சேர்ந்த ஐ.டி. ஊழியர்கள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னையை சேர்ந்த ஐ.டி.நிறுவன ஊழியர்கள் 20-க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பின்னர், அங்கிருந்து தேனி மாவட்டத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, அனைவரும் சுற்றுலா வேனில் சென்று கொண்டிருந்தனர்.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே கொடைக்கானல் சாலையில் உள்ள டம்டம் பாறை பகுதியில் சென்றபோது, வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, மலைப்பாதையில் இருந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், வேன் ஓட்டுநர் மற்றும் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் உள்பட 15 பேர் பலத்த காயமடைந்தனர்.

கொடைக்கானல் டம்டம் பாறை அருகே வேன் கவிழ்ந்ததில், சென்னையை சேர்ந்த 15 பேர் படுகாயம்!

விபத்து குறித்து தகவல் அறிந்த தேவதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவமனை மற்றும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த விபத்தில் 5 பேர் பலத்த காயமடைந்த நிலையில், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.