மலம் சிக்கலின்றி வெளியேற கைப்பிடி திராட்சை போதும்!

மலச்சிக்கல்… இது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதால் அதில் கவனம் தேவை. நம்மில் பலர் உணவு உண்ணும் விஷயத்தில் ஆர்வம் காட்டுவதுபோல மலத்தை வெளியேற்றுவது பற்றி அக்கறையில்லாமல் இருக்கின்றனர். அதனாலேயே நோய்களில் சிக்கி சிரமப்பட வேண்டியிருக்கிறது. குறிப்பாக சரும பாதிப்புகள் வருவதற்கு அடிப்படைக் காரணம் மலச்சிக்கலே.

நீர் அருந்துவது… இன்றைய சூழலில் உணவுமுறைகள் நிறையவே மாறி விட்டன. கூடவே உடல் உழைப்பும் குறைந்துவிட்டது. நேரம் காலம் பார்க்காமல் நொறுக்குத்தீனிகளை உண்பதாலேயே பலருக்கு மலச்சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமல்ல உண்ணும் உணவுக்கேற்ப நீர் அருந்த வேண்டும். இத்தனை லிட்டர் அத்தனை லிட்டர் நீர் என்றில்லாமல் அவ்வப்போது நீர் அருந்துவது அவசியம்.

மழைக்காலங்களில் சுற்றுப்புறச் சூழல் குளிர்ச்சியாக இருப்பதால் நம்மையும் அறியாமல் நீர் அருந்துவதை குறைத்துக் கொள்வோம். அதேபோல், வெயில் காலத்தில் நம் உடலிலிருந்து அதிகப்படியான நீர் வெளியேறுவது பற்றி தெரியாமல் வழக்கம்போல் நீர் அருந்திக் கொண்டிருப்போம். இவற்றையெல்லாம் கவனிக்காமல் இருந்தால் அது மலச்சிக்கலில் போய் கொண்டு விட்டுவிடும்.

தாம்பூலம் தரித்தல்…
அரை வயிறு உணவு, கால் வயிறு நீர், மீதமுள்ள கால் வயிறு காற்று என்று இருப்பதே சரி. இது காலை, மதியம், இரவு வேளைகளுக்கு வித்தியாசப்படலாம் என்றாலும் அடிப்படையான ஒன்று. ஆனால், பெரும்பாலானோர் இந்த விதிகளை கண்டுகொள்வதே இல்லை. மூக்கு முட்ட வயிறு நிறைய உண்பதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். இதனாலும் மலச்சிக்கல் ஏற்படலாம்.

முன்பெல்லாம் தாம்பூலம் தரித்தல் என்ற பழக்கம் இருந்தது. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு கலவையையே தாம்பூலம் தரித்தல் என்போம். இது நாம் உண்ட உணவு செரிமானமாவதற்கு பேருதவியாக இருந்தது. ஆனால், வெற்றிலை போடும் வயதான சிலர் புகையிலை சேர்த்துக் கொண்டதால் வெற்றிலை என்றாலே வெறுத்து ஒதுக்கத் தொடங்கிவிட்டார்கள்.

பழமும் உணவும்…
வெற்றிலையை பாக்கு, சுண்ணாம்புடன் சேர்த்துச் சாப்பிடுவது மட்டுமல்லாமல் மிளகு சேர்த்து காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வராது. உண்ட உணவு சரியாக செரிமானமாகவில்லை என்றாலோ, வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றாலோ வெற்றிலை, மிளகு சாப்பிட்டாலே போதும். வெற்றிலையை கழிவகற்றி என்று சொல்வது சரியாக இருக்கும்.

உணவுடன் பழம் சேர்த்துச் சாப்பிடலாமா, பழம் சாப்பிட்ட பிறகு உணவு உண்ணலாமா, உணவு உண்டதும் பழம் சாப்பிடலாமா என்ற கேள்விகள் பலர் முன் வைக்கப்படுகின்றன. இதில் எந்த முறையும் சரியல்ல. உணவை தனியாகவும், பழத்தை தனியாகவுமே சாப்பிட வேண்டும். குறைந்தது ஒரு மணி நேர இடைவெளியில் பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை.

உலர் திராட்சை…
ஒருவேளை பழ உணவாக எடுத்துக் கொண்டால் மலச்சிக்கல் பிரச்சினை வராமலிருப்பதுடன் உடல் ஆரோக்கியம் காக்கப்படும். பழங்களிலுள்ள சத்துகள் உள்ளது உள்ளபடி உடலைச் சென்றடையும். உலர் திராட்சை, பேரீச்சை போன்றவையும்கூட மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ளும். மலச்சிக்கலின்போது கைப்பிடி அளவு திராட்சையை இரவு நேரத்தில் சாப்பிட்டால் மறுநாள் காலை பிரச்சினையின்றி மலம் வெளியேறும்.

Most Popular

கொரோனா முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறேன்- குடியரசு தலைவர்

74வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். நாட்டு மக்களிடம் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “புதிய கல்விக் கொள்கை சிறப்பானது. தாய்மொழியில் கற்பது,...

பாடகர் எஸ்.பி.பி. நலமாகவே இருக்கிறார் -எஸ்.பி.பி மகன் சரண்

பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை அச்சப்படும் அளவிற்கு மோசமாக இல்லை நலமாகவே இருக்கிறார் என அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார். கடந்த 5ஆம் தேதி பிரபல பாடகரான எஸ்.பி சுப்பிரமணியனுத்துக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகினது....

விருதுநகர் பட்டாசு ஆலையில் 25க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!

விருதுநகரில் தியாகராஜபுரம் அருகில் ராஜகண்ணு பட்டாசு தொழிற்சாலையில் 25க்கும் மேற்பட்ட பெண் குழந்தை தொழிலாளர்கள் மீட்கபட்டுள்ளனர். கடந்த இருபதாண்டுகளில் இந்தியாவில் மட்டும் இரண்டு லட்சம் குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றன. குழந்தை தொழிலாளர்களாகவும், கூலிக்கு அடிமைகளாகவும்...

வாடகை போலீஸ் ட்ரஸ்ஸை மாட்டினார் – லஞ்சம் வாங்கும்போது ஒரிஜினல் போலீசிடம் மாட்டினார்- போலீஸ் அதிகாரியாக நடித்து மாமூல் வாங்கிய பெண்.

டெல்லியில் ஒரு பெண், தான் டெல்லியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணி புரியும் சப் இன்ஸ்பெக்டர் என்று கூறி பலரிடம் போலியான சலான்களை கொடுத்து பணம் வசூல் செய்துள்ளார் . டெல்லியில் இரண்டு...
Do NOT follow this link or you will be banned from the site!