பண்டிகை கால சிறப்பு ஆபர் -பானாசோனிக் அறிவிப்பு

 

பண்டிகை கால சிறப்பு ஆபர் -பானாசோனிக் அறிவிப்பு

பண்டிகை காலத்தை முன்னிட்டு விற்பனையை அதிகரிக்க பானாசோனிக் நிறுவனம், ”நியூ டிரீம்ஸ் நியூ செலிபிரிஷசன்ஸ்” என்ற சிறப்பு ஆபர் திட்டத்தை அறிவித்துள்ளது.

அதன்படி வரும் நவம்பர் 20ம் தேதி வரை பானாசோனிக் விற்பனை மையங்களில் விற்பனையாகும் அந்நிறுவனத்தின் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்களுக்கு பல்வேறு ஆபர்களை அறிவித்துள்ளது.

பண்டிகை கால சிறப்பு ஆபர் -பானாசோனிக் அறிவிப்பு

அதன்படி 32 இன்ச்க்கு மேற்பட்ட அளவுகளில் டிவி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான ஒரு வருட வாரண்டி (இன்ஸ்டாலேஷன் சேர்த்து ) உடன் கூடுதலாக ஒரு வருட வாரண்டி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இன்வெர்டர் பிசிபி மற்றும் இகோ டஃப் ஏசிக்களுக்கு 1+4 ஆண்டுகள் வாரண்டி அளிக்கப்படும் (இன்ஸ்டாலேஷன் சேர்த்து ) என்றும் கூடுதலாக ரூ. 699 செலுத்தினால் இன்வெர்டர் ஏசிக்களின் கம்பிரசர்களுக்கு 10 ஆண்டு வாரண்டி அளிக்கவும் முன்வந்துள்ளது.

மேலும், குறிப்பிட்ட வாசிங் மெஷன்களின் மோட்டார்களுக்கு 2+10 ஆண்டு வாரண்டி அளிக்கப்படும் என கூறி உள்ள பானாசோனிக், இலவசமாக பானாசோனிக் லிக்விட் டிடர்ஜெண்ட் வழங்கப்படும் என்றும், சுலப மாத தவணையில் பொருட்கள் வாங்கும் வசதி என பல ஆபர்களை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

பண்டிகை கால சிறப்பு ஆபர் -பானாசோனிக் அறிவிப்பு

மேலும், பிரிட்ஜ்களுக்கு 1+9 ஆண்டு கம்பிரசர் வாரண்டி அளிப்பதாகவும், கூடுதலாக சில குறிப்பிட்ட மாடல் ஓவன் வாங்கும் போது 1,999 ரூபாய்க்கு அளிப்பதாகவும் பானாசோனிக் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • எஸ். முத்துக்குமார்