சாத்தான்குளத்தில் பென்னிக்ஸ் கடை திறப்பு! சோகத்துடன் தேடி அலையும் டாமி!

 

சாத்தான்குளத்தில் பென்னிக்ஸ் கடை திறப்பு! சோகத்துடன் தேடி அலையும் டாமி!

சாத்தான்குளத்தில் போலீசாரால் அடித்துக்கொல்லப்பட்ட பென்னிக்ஸ், ஜெயராஜ் வீட்டில் வளர்ந்த நாய் டாமி, பென்னிக்ஸ் வருவார் என்று காத்திருக்கிறது. மூன்று மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட செல்போன் கடைக்குள் பென்னிக்ஸ் இருப்பதாக தேடிவிட்டு வாசலிலேயே சோகத்துடன் படுத்துக்கிடக்கிறாது நாய் டாமி.

சாத்தான்குளத்தில் பென்னிக்ஸ் கடை திறப்பு! சோகத்துடன் தேடி அலையும் டாமி!

சாத்தாகுளத்தில் கடந்த ஜூன் 19ம் தேதி அன்று, ஊரடங்கு விதிகளை மீறியதாக செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ், அவரது தந்தை ஜெயராஜ் இருவரையும் போலீசார் கைது செய்தனர். காவல்நிலையத்தில் இரவு முழுவதும் கண்மூடித்தனமாக அடித்ததில் பென்னிக்ஸ், ஜெயராஜ் இருவரும் உயிரிழந்தனர். போலீசாரின் இந்த அராஜக போக்கிற்கு உலகம் முழுவதிலும் இருந்து கண்டனங்கள் எழுந்தன. உயர்நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துவிசாரித்தது.

சாத்தான்குளத்தில் பென்னிக்ஸ் கடை திறப்பு! சோகத்துடன் தேடி அலையும் டாமி!

இந்த கொலை வழக்கு தொடர்பான தடயங்களை மத்திய தடய அறிவியல் துறை நிபுணர்கள் குழு ஆய்வு செய்யும் என சிபிஐ தெரிவித்துள்ளது. தற்போது மத்திய தடய அறிவியல் துறை நிபுணர்கள் குழு சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான தடயங்களை ஆய்வு செய்துவருவதாகவும் வரும் அக்டோபர் முதல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை ஆய்வு செய்வர் என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளத்தில் பென்னிக்ஸ் கடை திறப்பு! சோகத்துடன் தேடி அலையும் டாமி!

இந்நிலையில், அந்த சம்பவத்திற்கு பின்னர்பென்ன்னிக்ஸ் செல்போன் கடை பூட்டியே கிடந்ததால், மூன்று மாதங்களுக்கு பின்னர் இன்று திறக்கப்பட்டது. பென்னிக்ஸின் உ றவினரும் தபியுமான இம்ரான் என்பவர்தான் கடையை திறந்தார். மூன்று மாதங்களுக்கு பின்னர் கடை திறக்கப்பட்டதால் அப்பகுதியினர் வேதனையுடன் பார்த்துச்செல்கின்றனர்.

6 வருடங்களாக பென்னிக்ஸ் வளர்த்து வந்த டாமி , பென்னிக்ஸ் எப்போது வருவார் என்று எதிர்பார்த்து இருந்திருக்கிறது. இன்று கடை திறக்கப்பட்டதும் கடைக்குள் ஓடி பென்னிக்ஸை தேடியது. பின்னர் அங்கே இல்லை என்றதும், கடை வாசலிலேயே சோகமாக படுத்துக்கிடக்கிறது.