“வாட்ஸ் அப் குரூப்ல என் நிர்வாண வீடியோ வைரலாவுதே..’ – பெண் மாடல் கண்ணீர்.

 

“வாட்ஸ் அப் குரூப்ல என் நிர்வாண வீடியோ வைரலாவுதே..’ – பெண் மாடல் கண்ணீர்.


மும்பையின் ஆபாச படமெடுக்கும் கூட்டம் தன்னை மயக்க மருந்து கொடுத்து நிர்வாண வீடியோ எடுத்ததாக ஒரு பெண் மாடல் புகார் கூறியுள்ளார்.

“வாட்ஸ் அப் குரூப்ல என் நிர்வாண வீடியோ வைரலாவுதே..’ – பெண் மாடல் கண்ணீர்.


மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பாலிவுட் சினிமா வட்டாரத்தை சமீபகாலமாக ஒரு ஆபாச பட விவகாரம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .நடிகையும் மாடலுமான கெஹான வசிஷ்ட் தலைமையில் செயல்பட்ட ஒரு கூட்டம் ஆபாச படமெடுத்து பணம் சம்பாதித்ததால் பலர் தினமும் கைது செய்யப்பட்டு வருகின்றனர் .இதில் காமத் என்பவர் இந்த கூட்டத்தின் இயக்குனராக இருந்து லண்டனிலுள்ள ஒரு நிறுவனத்திற்கு ஆபாச படங்களை எடுத்து அனுப்பியதால் கைது செயப்பட்டார் .அதன் பிறகு எட்டு படங்களுக்கு மேல் ஆபாச படங்களை எடுத்து கொடுத்த ஒரு சினிமா இயக்குனர் கைது செய்யப்பட்டார் .
இந்நிலையில் மும்பையை சேர்ந்த ஒரு 21 வயதான ஒரு பெண் மாடல் இந்த ஆபாச பட கூட்டத்தை பற்றி போலீசில் புகாரளித்தார் .அவரின் புகாரில் அந்த கூட்டத்தை சேர்ந்த அலிஷா என்ற பெண் தன்னுடைய கணவன் மோனு என்பவரை தன்னிடம் அறிமுகம் செய்துவைத்தாரென்றும்,அப்போது அவர் ஒரு சினிமா கேமெராமன் என்றும் அவர் பல படங்களை எடுக்கிறார் என்றும் கூறியதாக தெரிவித்தார் .அதன் பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்து இந்த மாடல் பெண்ணுக்கு 20000 ரூபாய் கொடுத்துவிட்டு ,ஒரு ஸ்டுடியோவிற்கு ஸ்டில்ஸ் எடுப்பதாக அழைத்து சென்றுள்ளார்கள் .பின்னர் அங்கு அவருக்கு மயக்க மருந்து கலந்த ஒரு குளிர்பானத்தினை குடிக்க கொடுத்துள்ளார்கள் .அந்த பானத்தை அந்த மாடல் பெண் குடித்ததும் மயக்கமுற்றார் ,அந்த மயக்க நிலயில் அந்த பெண்ணை நிர்வாண வீடியோ எடுத்துள்ளார்கள் .பின்னர் அந்த பெண் வீட்டிற்கு வந்ததும் அவரின் தோழியொருவர் அவருக்கு போன் செய்து அவருடைய நிர்வாண வீடியோக்கள் வாட்ஸ் அப்பில் வைரலாகி வருவதாக கூறியுள்ளார் .பின்னர் அந்த பெண்ணும் வாட்ஸ் அப் க்ரூப்பில் தனது நிர்வாண வீடியோவை பார்த்து அதிர்ந்தார் .அதனால் அந்த பெண் அங்குள்ள காவல் நிலையத்தை அணுகி தன்னை ஏமாற்றிய அலிஷா மற்றும் கான் ஆகியோர் மீது புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிந்து அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

“வாட்ஸ் அப் குரூப்ல என் நிர்வாண வீடியோ வைரலாவுதே..’ – பெண் மாடல் கண்ணீர்.