தண்ணீர் இல்லாத ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண் யானை!

 

தண்ணீர் இல்லாத ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண் யானை!

விவசாய கிணற்றில் பெண் யானை ஒன்று தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீர் இல்லாத ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண் யானை!

தருமபுரி மாவட்டம் ஏலகுண்டூர் அருகே பஞ்சப்பள்ளி காப்புக்காடு பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் பெண் யானை ஒன்று தவறி விழுந்தது. உணவை தேடி வந்த யானை 50 அடி ஆழம் கொண்ட தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த நிலையில் அதை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது யானைக்கு மயக்க ஊசி அளித்து, கிரேன் மூலம் அதை மீட்கும் பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். அத்துடன் யானையின் பசியை போக்க வனத்துறையினர் தென்னக்கீற்றை அளித்து அதன் பசியை போக்கி வருகின்றனர் .

தண்ணீர் இல்லாத ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண் யானை!

குறிப்பாக கோவை மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில் 15 யானைகள் அடுத்தடுத்து பல்வேறு காரணங்களால் உயிர் இழந்தது. இதனால் யானைகளின் பிறப்பு ,இறப்பு, மனித விலங்கு மோதல் உள்ளிட்டவை குறித்து ஆராய 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக மனித விலங்கு மோதல் என்ற அடிப்படையில் ஆராய்ந்து பார்க்கும்போது யானைகள் விவசாய நிலங்களுக்கு வரும்போதும், வனத்தை ஒட்டிய பகுதிகளுக்கு வெளியில் வரும்போது மட்டுமே இந்த மோதல்கள் உருவாகின்றன என்பது தெரிய வந்துள்ளது . இதனால் யானைகளின் முக்கியத்துவத்தைக் கருதி அதன் இறப்பைக் குறைக்கும் வண்ணம் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.