காவல் நிலையத்தில் பிறந்த குழந்தை -பலாத்காரத்துக்குள்ளான பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.

 

காவல் நிலையத்தில் பிறந்த குழந்தை -பலாத்காரத்துக்குள்ளான பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.

பாலியல் பலாத்காரத்துக்குள்ளான பெண்ணுக்கு போலீஸ் ஸ்டேஷனிலேயே குழந்தை பிறந்த சம்பவம் நடந்துள்ளது

காவல் நிலையத்தில் பிறந்த குழந்தை -பலாத்காரத்துக்குள்ளான பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.


மத்தியப் பிரதேசத்தின் சிந்துவாராவில் உள்ள குந்திபுரா பகுதியில் ஆகாஷ் யுவனாதி என்ற 21 வயது இளைஞன், அதே பகுதியில் வசிக்கும் 14 வயதான பெண்ணை காதலித்தார் .பிறகு அவரை திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து ஒன்பது மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார் .இப்போது அந்த பெண் கர்ப்பமாக இருந்தார் .அந்த பெண் அவரை கல்யாணம் செய்ய கேட்டபோது அவர் மறுத்தார் .

அதனால் அந்த நிறை மாத கர்ப்பிணி பெண் கடந்த செவ்வாயன்று குந்திபுரா காவல் நிலையத்திற்கு அந்த 21 வயது இளைஞர் மீது கற்பழிப்பு புகார் அளிக்க வந்தார். புகார் அளிக்கும் போது, ​​அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது அவரை மருத்துவமனைக்கு கூட்டி செல்ல நேரம் இல்லை.
இதற்கிடையில், அங்கிருந்த சில பெண் கான்ஸ்டபிள்கள் அந்த பாலியல் பலாத்காரத்துக்குள்ளான அந்த கர்ப்பிணி பெண்ணை சில உள்ளூர் பெண்களின் உதவியுடன் காவல் நிலைய வளாகத்தில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்றனர். அதன் பிறகு அந்த சிறுமிக்கு அந்த அறையில் ஆண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு, இளம்பெண்ணும் அவரது குழந்தையும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார் . இருப்பினும், அவரது மொபைல் போன் உதவியுடன் போலீசார் அவரைப் பிடித்தனர்.