’’ஒருமாதிரியா feelஆ இருக்கு..’’-குரல் உடைந்து பேசும் நடராஜன்

 

’’ஒருமாதிரியா feelஆ இருக்கு..’’-குரல் உடைந்து பேசும் நடராஜன்

தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் ஐபிஎல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசிய நடராஜன் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு , இந்திய அணிக்காக ஒரு நாள் கிரிக்கெட், டி20 உள்ளிட்ட கிரிக்கெட்டில் விளையாடி சிறப்பான பங்களிப்பை செய்து வந்தார்.

’’ஒருமாதிரியா feelஆ இருக்கு..’’-குரல் உடைந்து பேசும் நடராஜன்

இதனிடையே நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய நடராஜன் , மூன்றாவது போட்டியில் இருந்து விளையாடும் 11 பேர் கொண்ட வீரர்களில் தேர்வு செய்யப்படவில்லை. இதுதொடர்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நிர்வாக இயக்குனர் டாம் மூடி கூறுகையில், நடராஜனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நடராஜன், முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வருவதாகவும் , காயத்தின் வீரியம் தொடர்ந்து அதிகரிப்பதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுவதாகவும் தகவல் வெளியானது.

இதனால் நடராஜனின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

’’ஒருமாதிரியா feelஆ இருக்கு..’’-குரல் உடைந்து பேசும் நடராஜன்

இது தொடர்பாக நடராஜன் பேசிய வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கிறது சன் ரைசர்ஸ் அணி. அதில், ‘’ஹாய்..திஸ் நடராஜன். இந்த வருசம் நான் ஐபிஎல்லில் இருந்து டோட்டலாக மிஸ் ஆகிறேன். அதுக்காக ரொம்ப ரொம்ப வருத்தமாக இருக்குறேன். லாஸ்ட் டைம் நல்லா பண்ணியிருந்தேன்.

’’ஒருமாதிரியா feelஆ இருக்கு..’’-குரல் உடைந்து பேசும் நடராஜன்

அதனால இந்த வருசம் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. அதுவும் இந்தியாவுல நடப்பதால அதிக எதிர்பார்ப்பு இருக்குறதால நானும் எதிர்பார்ப்புடன் இருந்தேன். ஆனா, முழங்கால் அறுவை சிகிச்சையினால விளையாட முடியல. ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுறேன். எனக்கு சப்போர்ட் செய்த எல்லோருக்கும் நன்றி. ஒரு மாதிரி..என்ன சொல்றதுன்னு தெரியல.. ஒருமாதிரியா ஃபீல்- ஆ இருக்கு. இனிவரும் எல்லா ஆட்டங்களிலும் சன்ரைசர்ஸ் அணி வெல்லவேண்டும். பெஸ்ட் விஷஸ்.’’என்று தெரிவித்துள்ளார்.