செப்டம்பர் முதல் பள்ளிகளைப் படிப்படியாகத் திறக்க மத்திய அரசு திட்டம்!

செப்டம்பர் முதல் பள்ளிகளைப் படிப்படியாகத் திறக்க மத்திய அரசு திட்டம்!

செப்டம்பர் மாதம் முதல் படிப்படியாக பள்ளிகளைத் திறப்பது பற்றிய வழிகாட்டுதல்களை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

செப்டம்பர் முதல் பள்ளிகளைப் படிப்படியாகத் திறக்க மத்திய அரசு திட்டம்!
இந்தியாவில் தினசரி கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 50 ஆயிரம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதே நிலை சென்றால் இன்னும் சில வாரங்களில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேருக்கு கொரோனா என்ற நிலை வரலாம் என்று எச்சரிக்கை எழுந்துள்ளது.

செப்டம்பர் முதல் பள்ளிகளைப் படிப்படியாகத் திறக்க மத்திய அரசு திட்டம்!
இந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மக்கள் சுதந்திரமாக பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அடுத்தக் கட்டமாக பள்ளிகளைத் திறந்து விட மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. முதல் கட்டமாக, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை செப்டம்பர் மாதம் திறக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

செப்டம்பர் முதல் பள்ளிகளைப் படிப்படியாகத் திறக்க மத்திய அரசு திட்டம்!
செப்டம்பர் 16க்குப் பிறகு 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளைத் திறக்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு ஆகஸ்ட் இறுதியில் வெளியிடும் என்று தெரிகிறது.
இருப்பினும் தமிழகத்தைப் பொறுத்தவரை நிலைமை படிப்படியாக சீரடைந்த பிறகு, பள்ளி திறப்பது குறித்து பெற்றோரின் கருத்துக்களைப் பெற்ற பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.