டெம்போ டிரைவரின் மகன் இன்று கோடிக்கு அதிபதி – திறமைக்கு கிடைத்த ஐபிஎல் பரிசு!

 

டெம்போ டிரைவரின் மகன் இன்று கோடிக்கு அதிபதி – திறமைக்கு கிடைத்த ஐபிஎல் பரிசு!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் தொடரில் விட்டுக்கொடுக்காமல் இந்தியா கடைசி வரை போராடி வெற்றிபெற்றது. அதற்கு மூத்த வீரர்களைக் காட்டிலும் இளம் வீரர்களே உத்வேகத்துடன் விளையாடி வெற்றியைத் தேடித்தந்தனர். முந்தைய காலங்களில் போராடாமலேயே இந்தியா சரணடைந்து விடும்; இப்போது இருக்கும் வீரர்கள் மத்தியில் போராட்டக் குணம் அதிகரித்திருக்கிறதே அதற்குக் காரணம் என்ன என்ற கேள்வி எழுந்தது.

டெம்போ டிரைவரின் மகன் இன்று கோடிக்கு அதிபதி – திறமைக்கு கிடைத்த ஐபிஎல் பரிசு!
டெம்போ டிரைவரின் மகன் இன்று கோடிக்கு அதிபதி – திறமைக்கு கிடைத்த ஐபிஎல் பரிசு!

இந்தக் கேள்விக்கு, “இந்திய அணிக்கு முன்பு நகரங்களிலிருந்து வீரர்களைத் தேடினார்கள்; ஆனால் இப்போது நகரங்களைத் தாண்டி குக்கிராமங்களில் வீரர்கள் தேடப்படுகிறார்கள். எளிய குடும்பத்தில் பிறக்கும் அவர்கள் வாழ்க்கையையே போராட்டமாக வாழ்பவர்கள். அவர்களுக்குக் கிரிக்கெட் போட்டியில் போராடுவது ஒன்றும் பெரிய விஷயமில்லை” என கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போகலே ஸ்வீட்&ஷார்ட்டாக ஒரு பதிலைக் கூறினார். நடராஜன், ரிஷப் பண்ட், ஷர்துல் தாக்கூர், சைனி, ஹர்திக் பாண்டியா என பல வீரர்களை உதாரணமாக கை காட்டலாம்.

டெம்போ டிரைவரின் மகன் இன்று கோடிக்கு அதிபதி – திறமைக்கு கிடைத்த ஐபிஎல் பரிசு!

இவர்களெல்லாம் எங்கே இருந்து தேர்வு செய்யப்பட்டார்கள், எதனடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்கள் என்ற கேள்வி எழலாம். அதற்கு முக்கியக் காரணம் ஐபிஎல். ஐபிஎல் என்றாலே பிசிசிஐக்கு பணம் கொழிக்கும் மரம் என்ற ஒரு பேச்சு உண்டு. ஆனால் யாரும் அறியாத மற்றொரு கோணம் தான் மேலே குறிப்பிட்டது. திறமைகளைக் கண்டுணர்ந்து தேடிப் பிடித்து அவர்களைப் பிரபலமாக்குவதில் முக்கியப் பங்குவகிக்கிறது. இது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

இவர்களின் வரிசையில் தற்போது இணைந்திருப்பது டெம்போ டிரைவராக இருந்தவரின் மகன் சேதன் சக்காரியா. ராஜஸ்தான் அணி இவரை ரூ.1.20 கோடிக்கு ஏலம் எடுத்திருக்கிறது. உள்ளூர் போட்டிகளில் சௌராஷ்டிரா அணிக்காக இடதுகை பந்துவீச்சாளராக விளையாடிவரும் சக்காரியாவுக்கு வயது 22. ஒரு டெம்போ டிரைவரின் மகன் ஐபிஎல்லுக்காக கோடிக் கணக்கில் ஒப்பந்தம் செய்யப்பட்டது ஒன்றும் சாதாரணமாக நிகழவில்லை. அதற்கு அவ்வளவு கடின உழைப்பை அவர் போட்டிருக்கிறார்.

Image

குஜராத்தைச் சேர்ந்த சக்காரியாவின் தந்தை சாதாரண டெம்போ டிரைவராகவே வேலை பார்த்துவந்துள்ளார். குடும்பத்திற்கே படியளந்த அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பே வேலையை விட்டு நின்றிருக்கிறார். மிகவும் வறுமையில் வாடிய குடும்பத்தை கிரிக்கெட் விளையாடிக் கொண்டே ஆங்காங்கே வேலைசெய்து காப்பாற்றி வந்திருக்கிறார் சக்காரியா. இன்னும் சில தினங்களில் ஐபிஎல் திரைகளில் தோன்றவிருக்கும் சக்காரியாவின் வீட்டில் கடந்த ஐந்து வருடங்களாக ஒரு சொந்த டிவி கூட இல்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அந்த ஐந்து வருடங்களும் கிரிக்கெட் போட்டிகளை நண்பர்கள் வீட்டிலுள்ள டிவி மூலமே பார்த்துள்ளார்.

ஏலத்தில் எடுத்த பிறகு பேட்டியளித்த சக்காரியா, “இப்படியொரு மகிழ்ச்சிமிக்க தருணத்தில் என்னுடைய தம்பி இல்லை என்பதே பெரும் குறையாக இருக்கிறது. அவன் இருந்திருந்தால் இந்நேரம் என்னை விட அவன் தான் அதிக மகிழ்ச்சியாக இருந்திருப்பான். நான் சையத் முஷ்டாக் அலி தொடரில் விளையாடிக்கொண்டிருந்த வேளையில் அவன் தற்கொலை செய்துகொண்டான். இச்சமயத்தில் அவனுடைய இல்லாமை வேதனையடைய வைக்கிறது.

டெம்போ டிரைவரின் மகன் இன்று கோடிக்கு அதிபதி – திறமைக்கு கிடைத்த ஐபிஎல் பரிசு!

நான் குடும்பத்தைக் கவனித்துக் கொள்கிறேன் என்று கூறி அப்பாவை வேலையை விட்டு நிறுத்தினேன். ஐபிஎல் மூலம் வரப்போகும் பணத்தை என்ன செய்யப் போகிறாய் எல்லோரும் கேட்கிறார்கள். பணம் முதலில் வரட்டும் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்றேன். ஒரு நல்ல வீடு வாங்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம். பணம் வந்தால் முதலில் நான் நல்ல வீடு வாங்குவேன்” என்று பேசியுள்ளார்.