• February
    19
    Wednesday

Main Area

Main



பெற்ற மகளை கருணை கொலை செய்ய மனு கொடுத்த தம்பதி: கலங்க வைக்கும் சோகம்!

தென்காசி
தென்காசி

தென்காசி மாவட்டம் செங்கோட்டை கொட்டாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையா. 68 வயதாகும் இந்த முதியவருக்கு 35 வயதில் சுப்புலட்சுமி என்ற மகள் உள்ளார். சுப்புலட்சுமி கடந்த 25 ஆண்டுகளாகத் தாடை விலங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 

ttn

இந்நிலையில் மகள் சுப்புலஷ்மியை தொடர்ந்து பராமரிக்க  முடியாததால் அவரை கருணை கொலை செய்யவேண்டும் என்று அவரது தந்தை முருகையா ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இதுகுறித்து கூறியுள்ள  அவர், எனக்கும் என் மனைவிக்கும் வயதாகி விட்டது.  கூலி தொழில் செய்வதால்  களை பராமரிக்க வசதியும் இல்லை.

ttn

இதனால் கடந்த 2016 ஆம் ஆண்டே மகளை கருணை கொலை செய்ய வேண்டும் என்று கூறி நெல்லை ஆட்சியரிடம் மனு கொடுத்தேன். ஆனால்  அந்த மனு மீது எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை. எங்களுக்கு உதவியும் கிடைக்கவில்லை. தற்போது தென்காசி ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளேன்' என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.