மகனுக்காக காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான தந்தை உயிரிழப்பு!

 

மகனுக்காக காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான தந்தை உயிரிழப்பு!

சென்னை பழைய பல்லாவரம் மல்லிகா நகரை சேர்ந்தவர் ஏழுமலை(62) இவரது மகன் நித்தியானந்தம், கடந்த 1ம் தேதி அப்பகுதியில் பூமிக்கடியில் கேபிள் பதிக்கும் பணியை பல்லாவரம் மின்வாரிய இளநிலை பொறியாளர் ஹரிஹரன்(38) என்பவர் ஈடுபட்டிருந்தார்.

அப்போது நித்தியானந்தம் மற்றும் இளநிலை பொறியாளருடன் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறில் பொறியாளரை தாக்கியதாக நித்தியானந்தம் மீது பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து நித்தியானந்தம் தலைமறைவாகி விட்டார். இதனால் அவரது தந்தை ஏழுமலையை பல்லாவரம் போலீசார் தினந்தோறும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வந்தனர்.

மகனுக்காக காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான தந்தை உயிரிழப்பு!

சி.எஸ்.ஆர் மட்டும் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். இன்று வழக்கம் போல் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான ஏழுமலை விசாரணையின் போதே காவல் நிலையத்தில் வாந்தி எடுத்தார். சற்று நேரத்தில் மயங்கி விழுந்தார். அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். காவல் நிலையம் ஆஜரான நபர் உயிரிழந்ததற்கு காரணம் மாரடைப்பா? அல்லது போலீசாரின் தாக்குதலா? என்பது பிரேத பரிசோதனை முடிவில் தெரியவரும்.